இரு நாட்களுக்கு முன்பு மாநில நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனைத்து கோட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது .அதில் RMS பிரிவில் இருந்து 13 MTS பதவிகள் தமிழகத்திற்கு மட்டும் அஞ்சல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன .தேவையான கோட்டங்கள் அதற்குரிய PROPOSAL களை உடனே அனுப்புமாறு அதில் கூறப்பட்டுள்ளது .
------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் இயங்கும் பாளை பயிற்சி மையத்திற்கு (WTC) TRAINER ஆக திரு வெங்கடேஷ் அவர்கள் (தூத்துக்குடி கோட்டம் ) நியமிக்கப்பட்டுள்ளார்கள் .இனி தடையின்றி பயிற்சி வகுப்புகள் பாளையம்கோட்டையிலே நடக்கும் .
----------------------------------------------------------------------------------------------------------------
நாடுமுழுவதும் 24 லட்சம் மாநில /மத்திய அரசு பணிகளில் காலியிடங்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அரசாங்கம் எவ்வித தயக்கமும் இன்றி அறிவித்துள்ளது .ரயில்வேயில் 2.4 லட்சமும் அஞ்சல் துறையில் 54000 பணியிடங்கள் காலியாகவே உள்ளன .அனைத்து காலி பணிஇடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை நாம் தொடர்ந்து வலியுறுத்தி போராடி வந்தாலும் அரசு நமது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரியவில்லை
0 comments:
Post a Comment