...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 4, 2018

மாநில சங்கசிறப்புச் சுற்றறிக்கை எண் : 14 நாள்: 3.8.18.
""""""""""'""""""""""""""""""""""""""""
IPPB திருவிழா ! 
அவதிக்கு ஒரு விழா 

வீதியெங்கும் கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டம் ! 
அஞ்சல் துறையில் 
இன்னும் ஏன் நம் மௌனம் ? 
""""""""""""""""""""""""""""""""""""""""
அன்புத் தோழர்களுக்கு, வணக்கம். 
நம்மை ஆள வருகின்ற, நமது உழைப்பினை முழுமையாக எடுத்துக் கொள்ள இருக்கின்ற India Post Payment Bank Ltd (Inc) என்ற கம்பெனி எதிர் வரும் 21.8.2018 அன்று நாடு முழுவதும் உள்ள 650 மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தலைமை அஞ்சலகங்களிலும் (Branches) ,  
மேலும் கூடுமானவரை அனைத்து துணை அஞ்சலகங்களிலும் ( Access Points) 
ஒரே நேரத்தில், 
நமது மாண்புமிகு  பாரதப் பிரதமர் மோடி அவர்களால் காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட உள்ளது. 
இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு கிளைகளிலும் என 
650 மாவட்டங்களில் திருமண மண்டபங்கள் அல்லது பொது இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குறைந்த பட்சம் 5000 பொது மக்களைத் திரட்டி பெரிய அளவில் விழா நடத்திட அஞ்சல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.  
இதேபோல கூடுமானவரை பிரதான இடங்களில் உள்ள ஒவ்வொரு Access Point என்கிற S.O. உள்ள ஊர்களில் திருமண மண்டபங்கள் அல்லது பொது இடங்கள் பிடித்து குறைந்தபட்சம் 2000 
பொதுமக்களைத் திரட்டி இந்த விழா நடத்திட வேண்டும் என உத்திரவு இடப்பட்டுள்ளது.  
இந்த நிகழ்வுகளில் அனைத்து மாநிலங்
களிலும்,  மத்திய/மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற/ராஜ்ய சபா/ சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பகுதியில் வாரியாக முக்கிய பல பிரமுகர்கள் கலந்துகொள்ள 
ஏற்பாடு செய்திட கோரப்பட்டுள்ளது. 
இவர்கள் முன்னிலையில் 
IPPB ஐத் துவக்கி வைத்து பாரதப்பிரதமர் 
உரையாற்ற உள்ளார். 
இதற்கான காணொளிக் காட்சிகளை ஒரே நேரத்தில் பார்த்திட ஏற்பாடுகள் நாடு முழுதும் வேகமாகச் செய்யப்பட்டு வருகிறது. 
இது ஏனெனில்,மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் IPPB மூலமாக, அதன் அஞ்சல் துறை ஏஜண்டுகளாகிய நமது பணியாளர்கள் மூலமே மத்திய அரசு செயல் படுத்திட திட்டம் அறிவித்துள்ளது. ஆனால் நேரடியாக அஞ்சல் துறை மூலம் அல்ல. கம்பெனியின் ஏஜண்டாக மட்டுமே நமது துறை இருக்கும். 
IPPB ன் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என்பவர்  
(MD& CEO)
நமது துறையின் செயலர் திரு.
A.N. நந்தா அல்லர்.
Vodafone M- Pesa நிறுவனத்தின் CEO வாக இருந்த திரு. சுரேஷ் சேத்தி ஆவார்.
IPPBன் Corporate அலுவலகம், இவரது தலைமையில் புது டெல்லியில் இயங்கும். 
இந்த அலுவலகம் 
Postal Directorate க்கு இணையாக தனித்த சுதந்திரத்துடன்  பணியாற்றும்.
23 அஞ்சல் வட்ட தலைமையகங்களிலும் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில அதிகாரிகள் தலைமையில் இதன் மாநில  அலுவலகங்கள் 
21.8.2018 முதல் ஒவ்வொரு 
CPMG அலுவலக வளாகத்திலும் இயங்கத் துவங்கும்.
இதே போல 
650 மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களில்  இதன் கிளைகள் இதன் கிளை அதிகாரி  (Branch Manager) தலைமையில்  எதிர்வரும் 21.8.18 முதலே கோட்ட அலுவலகத்திற்கு இணையாக இயங்கத் துவங்கும். 
இதன் Counter operation மற்றும்  பணப் பரிவர்த்தனைகள்  
inter operable ஆக PO 
SB counterகள் மூலமே செய்யப்படும். 
இணைக் கணக்குகளின் அதிகப்படியான தொகை POSB க்கு அன்றன்றைக்கே அவரவர் கணக்கிற்கு மாற்றப்படும். 
துணை மற்றும் கிளை அஞ்சலகங்கள் Customer Access Point ஆக விளங்கும். 
இதன் பரிவர்த்தனை மற்றும் வாடிக்கையாளர் சேவை முகமைகளாக  தபால்காரர்களும் GDS ஊழியர்களும் Hand Held Bio Matric Device மூலம் பயன்படுத்தப் படுவார்கள்.
தபால்காரர்களுக்கும் நமது H.O , S.O. மற்றும் BO.க்களுக்கும்,  IPPB சேவைகள் தவிர கமிஷன் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ள Third Party products  என்கிற பிற பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் Insurance, வங்கிக் கடன்கள்,Mutual Funds,
பன்னாட்டு பரிவர்த்தனைகள், Cable TV, DTH கட்டணங்கள், மொபைல் ரீசார்ஜ், மின் கட்டணம்,தொலைபேசி கட்டணம் உள்ளிட்ட அவ்வப்போது ஒப்பந்தமிடும் 320 வகையான சேவைகள் 
அளித்திட பயிற்சி அளிக்கப்படும். 
அதற்கு மாதம்தோறும் இலக்குகள் நிர்ணயித்து இந்தப் பணியானது பெறப்படும். 
அடுத்த கார்ப்பரேட் கம்பெனி அஞ்சல் துறையின் இன்சூரன்ஸ் பகுதியில்  முதலில் வரப்போகிறதா அல்லது 
Premium Products என்ற வளம் கொழிக்கும் Parcel, E-commerce, Logistics, Speed, emo பகுதிகளில் வருகிறதா ? என்பதே இதற்குப் பின்னதான  கேள்வி. தனியான Parcel Directorate ஏற்கனவே துவக்கப்பட்டுவிட்டதே இதற்கான முன்னோடிதான். 
Insurance(PLI/RPLI) பகுதியில் ஏற்கனவே துறை அமைச்சரால் கடந்த 7.7.2018 அன்றே ஊடக அறிவிப்பாக கார்ப்பரேட் கம்பெனி துவக்கப்பட உள்ள செய்தி அறிவிக்கப்பட்டு விட்டது. 
மிச்சம் உள்ளது,  நட்டத்தில் இயங்கும்  தபால் கார்டு , Inland Letter, கவர், News paper மட்டுமே . இவைகளை ஒரே நாளில் அரசு கழற்றியும் விடலாம் அல்லது அஞ்சல் 
துறை மக்களின் சேவைத்துறை என்று காட்ட, குறைந்த ஊழியர்களை DOT வைத்திருந்தது போல சில காலம் வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அது காலத்தின் முடிவு. 
1. இது எல்லோரும் நினைப்பது போல
ஏதோ மோடி அவர்களின் ஆட்சியால் மட்டுமே வந்த முடிவு அல்ல. ஏற்கனவே National  Postal Policy UPA II அரசினால் அறிவிக்கப்பட்டு PBI க்காக திரு. சிதம்பரம் அவர்களால் அனுமதி கோரி RBI யிடம் 2013 ல் மனுச் செய்யப்பட்டது அனைவருக்கும் மறந்திருக்கும். அப்போதே RBI ன் Condition கள் அனைத்தும் குறிப்பாக கம்பெனி சட்டத்தில் பதிவு செய்வது, 49% அன்னிய/தனியார் முதலீட்டை ஏற்பது உள்ளிட்டவை  அஞ்சல் துறையாலும், அரசினாலும் ஏற்கப்பட்டுவிட்டன. 
இவற்றை பல காலங்களில் அவ்வப்போது நமது மாநிலச் சங்க வலைத்தளத்தில் நாம் பதிந்து ஆபத்தை முன் கூட்டியே அறிவித்திருக்கிறோம். 
GST போல, ஆதார் போல, NPS போல எல்லா திட்டங்களிலும்,  எல்லா Corporate நடவடிக்கைகளிலும் UPA கொண்டு 
வந்ததை NDA  அமல் செய்கிறார்கள். அல்லது இந்த மாதிரியான விஷயங்களில் இருவரும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தில் வாக்களித்து நிறைவேற்றுகிறார்கள். இதுதான் உண்மை.
மோடி அவர்கள் சற்று அதிகம் சென்று இதனை பிரச்சாரமாக ஆக்கிக் கொள்கிறார்.
அவ்வளவே. நம்மைப் பொறுத்த வரை,  கட்சி பேதமின்றி உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான நிலையை அல்லது கொள்கை முடிவை  எந்தக் கட்சி அல்லது ஆட்சி எடுத்தாலும் எதிர்த்துப் போராட வேண்டும். இது NFPTE/NFPE ன் காலங் காலமான முடிவு. கொள்கை. அதனை முன்னெடுத்து செல்வோம். இவருக்கு பதில் அவர்;அவருக்கு பதில்  இவர் ; என்ற தனி நபர் அரசியலை அல்ல. ஏனெனில் இருவரும் இவைகளுக்கு பொறுப்பானவர்களே.
2. மெல்ல மெல்ல கம்பெனிகளின் கீழ் 
நமது துறையின் POSB, Insurance, Mail Operation என மூன்று பகுதிகளும் வந்துவிட்டால், நமக்கு அரசு ஊழியர் தகுதி எதுவரை இருக்கும் ?  கம்பெனிகளில் ஓய்வூதியம் உண்டா ? 
அடிப்படைக்கே வேட்டு வைக்கப்படின் NPS ஐ எதிர்க்கும் போராட்டம் என்பது எது வரையில்  ? 
நம் அவசரத்தேவை இலாக்காவைக் காப்பதா ? இல்லையா ? 
3.தனியார் மயம், தாராளமயம், அந்நிய மயம், கார்ப்பரேட் மயம் , உலகமயம் என அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுவந்த நாம், நமது துறையிலேயே இவையோ, இவற்றின் பகுதியோ மெல்ல மெல்ல புகுத்தப் படும்போது நீண்ட கால மௌனம் சரிதானா ? நாம் இதற்காக உடனடிப் போராட்டம்/வேலை நிறுத்தம் நடத்திட வேண்டாமா ? சிந்தியுங்கள். 


தோழமையுடன் , 

NFPE அஞ்சல் 
மூன்று சங்கம், 
தமிழ் மாநிலம்.  
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 சிறப்பு சுற்றிக்கை 

0 comments:

Post a Comment