...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 31, 2018

                       LSG எனும் சாதனைக்குள்    -  மறைந்திருக்கும் வேதனை 
எல்லோருக்கும் LSG எனும் சாதனையை கேடர் சீரமைப்பு மூலம் பெற்றுவிட்டதாக பறைசாற்றப்படுகிறது .கேடர் சீரமைப்பால்   வேண்டிய இடம் கிடை க்கவேண்டும் இல்லையென்றால் பதவியுயர்வை மறுத்துவிட்டு அங்கேயே பணியாற்றிட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற தற்காலிக சமரசத்தை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம் 
ஆனால் அதையெல்லாம் தாண்டி LSG பதவி உயர்வு என்பது HIGHER DUTIES AND RESPONSIBILITIES உள்ளடக்கியது என்றும் அதற்கு எந்தவித  பணபயன்களும் இன்றி பணியாற்றிட நிர்பந்திப்பது எந்தவகையில் நியாயம் .என்பதனை நாம் புரிந்தாக வேண்டும் .
 LSG   பதவி உயர்வால் எழுந்துள்ள எழுத்தர் காலிப்பணியிடங்களை கணக்கீடுவது எப்போது ?   RECRUITMENT விதிகளை தளர்த்தி HSG II மற்றும் HSG I பதவிகளை நிரப்புவது எப்போது ? ஒவ்வொரு கோட்டங்களிலும் கண்கூடாக சராசரி 50 எழுத்தர்பதவிகள்  காலியாக இருந்தும் போதும்  VACANCY NOTIFY பன்னும் பொழுது 50 எப்படி 5 ஆக மாறுகிறது-CHAIN OF VACANCY கணக்கீட்டை மறந்தது யார் ? இதையெல்லாம் தாண்டி இன்று IP ASP ஆக பதவியுயர்வு பெற்றால் SAME GP என்றாலும் அந்த பதவியுயர்வில் DUTIES AND RESPONSIBILITIES IP கேடரைவிட அதிகமாக இருக்கிறது என்று 3 சதம் FIXATION பெனிபிட் கொடுக்கப்பட்டுவிட்டது .அதைக்காட்டி இன்று போஸ்ட்மாஸ்டர் கிரேடு தோழர்களும் 3 சதம் FIXATION பயனை அடைந்துவிட்டார் .LSG பதவி உயர்வில் அரசாங்கம் சொல்லுகிற மாதிரி DUTIES AND RESPONSIBILITIES இல்லையா ? LSG என்பது PA  கேடரைவிட அதிக பொறுப்புள்ள பதவி கிடையாதா ?
           ASP களும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்களுக்கு மட்டும் இந்த பயன் கிட்டியது எப்படி ? அவர்களது போராட்டமா ? அவர்கள் வைத்த வாதத்தின் வல்லமையா ? 
  சிந்தீப்பீர் !  வரவிருக்கின்ற நமது மத்திய சங்க செயற்குழுவில் இந்த கோரிக்கை தமிழ்மாநிலச்சங்கம் சார்பில் வலுவாக எழுப்பப்படட்டும் ! LSG கேடருக்கான பாரபட்சம் நீக்கப்பட்டு 3 சதம் உயர்வு கிடைக்கட்டும் .
வழக்கம்போல் தமிழகம் முன் கை எடுக்கட்டும் !
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

2 comments:

  1. இவ்வளவு ஆள் பற்றாக்குறை இருந்தும் Lgo Vacant இல்லை என்கிறார்கள்.. இதற்கு தீர்வு எப்போது

    ReplyDelete
  2. 3 சதம் எப்படி கிடைத்தது,promoted through LDCE என்பதால்.

    ReplyDelete