...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, October 15, 2018

                                         நெஞ்சின்  நீங்கா  நினைவலைகள் -3
அண்ணன் பாலு அவர்கள் மாநிலசெயலராக இருந்தபோது இலாகா விதிகளை மதிக்காமல் செயல்பட்ட அன்றைய CPMG  ஒருவருக்கு ஏற்பட்ட நிலையினை பாரீர் ! பாரீர் !
 1996 யில் தமிழகம்  முழுவதும்  அ லுவலக மூடல் ஆட்குறைப்பு வாய்மொழி உத்தரவில் சட்டத்திற்கு புறம்பான செயல் என தான்தோன்றி தனமாக செயல்பட்ட  அன்றைய CPMG  அவர்களை கண்டித்து தமிழக அஞ்சல் மூன்று மாநிலச்சங்கம் மட்டும் களமிறங்கியது .NFPE யில் உள்ள பிற அனைத்துசங்கங்களும் ஏனைய சங்கங்களும் CPMG க்கு ஆதரவு நிலையெடுத்தது .இலாகா முதல்வரின் ஒப்புதல் இல்லாமலேயே தாம்பரம் கோட்டத்தில் இருந்து சுமார் 26 அலுவலகங்களை சென்னையில் உள்ள பிற கோட்டங்களில் இணைத்தது -விதிகளுக்கு புறம்பாக இட மாறுதல் உத்தரவுகள் -வேலைவாய்ப்பு அலுவலக மூலமல்லாமல் காசுவால் ஊழியர் நியமனம் -விளையாட்டு வீரர் ஒதுக்கீட்டில் முறைகேடு என காட்டுதர்பார் நடந்த நேரம் .அண்ணன் பாலு மட்டும் தனியாளாக நின்று போராடி வெற்றி பெற்றார் .போராட்ட அறிவிப்பை அறிவித்துவிட்டு ஓய்வெடுக்கும் தலைவரல்ல அண்ணன் பாலு -தொடர் முயற்சியில் இறங்கினார் .அஞ்சல் வாரிய தலைவரிடம் மனு -பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு நேரில் சென்று ஊழல் பட்டியல் -நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசு மற்றும் அழகர் சாமி அவர்கள் துணையுடன் டெல்லியில் முகாமிட்டு டெல்லியில் உள்ள விஜிலென்ஸ் கமிஷன் முன்பு சாட்சியம் மற்றும் சென்னையில் உள்ள CBI அலுவலகம் மூலம் மனு எனஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எ டுத்து அந்த அதிகாரியை திக்குமுக்காட வைத்தவர் அண்ணன் பாலு .அதன் விளைவு அந்த அதிகாரி BLACK LIST யில் கொணரப்பட்ட  அச்சு கம்பெனிக்கு அச்சுப்பணிகள் வழங்கியது விளையாட்டு மலர் வெளியிட தேவையான பேப்பர்களை வாங்கியதில்  விதிமீறல் நடந்தன என்று  நிரூபிக்கப்பட்டு அவரிடம் ரூபாய் 75000 UCR கட்ட அறிவுறுத்தப்பட்டு அவரும் பணத்தை UCR யில் பணத்தை கட்டினார் .  .மேலும் அவருக்கு கிடைக்கவேண்டிய பதவி நீட்டிப்பு மறுக்கப்பட்டது இறுதியாக ஓய்வூதியத்தில் ஒருபகுதி தடை செய்ய பட்டது .ஊழியர் நலனுக்கு எதிராக செயல்படும் அதிகாரி அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் தயங்காமல் தட்டிக்கேட்கும் போர்க்குணம் அண்ணன் பாலு ஒருவருக்கே உண்டு ...
 நன்றி .இந்த கட்டுரையை வடித்தவர் மாயவரம் தந்திட்ட மகத்தான தலைவர் தோழர் மருது சாமி --முன்னாள் மாநில உதவி செயலர் மயிலாடுதுறை .

0 comments:

Post a Comment