...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 26, 2018

                                                        முக்கிய செய்திகள் 
தபால்காரர் /MTS யில் இருந்து PA /SA பதவிக்கான தேர்வு 09.12.2018 அன்று நடைபெறுகிறது 2016-2017  & 2017-2018(01.04.2018-31.12.2018 ) காலிபணி இடங்களுக்கான தேர்வு இது .VACANCY  விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் 8 மற்றும் 10 என உள்ளது .தேர்விற்கு தயாராகும் தோழர் /தோழியர்களுக்கு NELLAI NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 
-----------------------------------------------------------------------------------------------------------------------                          RICT நெட் ஒர்க் தேடி அலையும் பரிதாப நிலை 

சில BO கள் இருக்கும் பகுதி முழுவதும் அஞ்சல் வாரியம் கொடுத்த SIM  கவரேஜ் இல்லை .சிலருக்கு தெருமுனையில் தான் கிடைக்கிறதாம் -சிலர் அலுவலகத்தை விட்டுவிட்டு மொட்டை மாடியில் தவம் கிடக்கின்றனர் .இதையெல்லாம் திட்டமிட்டு எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நெட்ஒர்க் இருக்கிறது என்பதை பார்த்து அதற்கேற்றாற்போல் அந்தந்த கம்பெனி SIM வழங்கியிருக்கலாம் 
----------------------------------------------------------------------------------------------------------------------
                                                நீதி வென்றது !
மூலைக்கரைப்பட்டி அம்பலம் BO வில் ரூபாய் 1400 விவகாரத்தில் REMOVED FROM ENGAGEMENT என கோட்ட அலுவலகத்தால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையிடு செய்யப்பட்ட வழக்கில் நேற்று மீண்டும் அந்த ஊழியருக்கு REMOVAL என்பது நிறுத்தப்பட்டு மீண்டும் பணி வழங்க உத்தரவு நமது இயக்குனர் திரு .பவன்குமார் IPS அவர்களால் வழங்கப்பட்டுள்ளது .இந்த வழக்கை எடுத்து நடத்தி வெற்றி கண்ட தோழர் பாலசுப்ரமணியன் ASP OD (RETD) அவர்களுக்கும் நமது ஆலோசகர் அண்ணன் சின்ராஜ் முன்னாள் மண்டல செயலர் மதுரை அவர்களுக்கும் NELLAI NFPE யின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment