...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 27, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
      நேற்று 26.10.2018 அன்று நடைபெற்ற நமது கோட்ட மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகளை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் கோட்டம் முழுவதுமுள்ள ஊழியர்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன .இதோ அதன் விவரங்கள்
1.பாளையம்கோட்டை தலைமை அஞ்சல் வளாகத்திற்குள் மீண்டும் கேன்டீன் தொடங்க ஏற்றுக்கொள்ளப்பட்டது .
2.நீதிமன்ற வழக்குகளுக்கு PA /APM கேடரில் இனி எந்த ஊழியர்களையும் வாய்தாவிற்கு அனுப்பக்கூடாது என்றும் இதுகுறித்து மண்டல அலுவலக LEGALCELL  வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
3.பாளையம்கோட்டை சேமிப்பு கவுண்டர்களில் இணைக்கப்பட்ட கூடுதல் வேலைகளான CC பிரிட்ஜ் கமிஷன் ஷெடுல் மற்றும் KYC பணிகள் இவைகளை மீண்டும் BACK OFFICE க்கு திருப்பப்படும் என்றும் இதுகுறித்து புதிய MDW 12.11.2018 குகள் அனைத்து ஊழியர்களின் சம்மதத்தோடு தயாரிக்கப்பட்டு கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பவும் நேற்றே போஸ்ட்மாஸ்டர் பாளையம்கோட்டைக்கு தாக்கீது அனுப்பப்பட்டுவிட்டது .
4.திருநெல்வேலி HO விற்கு இரண்டு LRPA மற்றும் அம்பை HO விற்கு விருப்பத்தின் அடிப்படையில் ஒரு தோழியரும் இணைக்கப்படவுள்ளனர் .இதுகுறித்து நேற்றே உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
5.01.01.2006 முதல் அந்தந்த கேடருக்கு உரிய ஆரம்பநிலை அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கவேண்டும் என்ற 03.10.2018 உத்தரவை விரைவில் அமுல்படுத்த உறுதியளிக்கப்பட்டது .இதனால் நமது தோழர்கள் ஹாஜி அலி நமசிவாயம் மந்திரமூர்த்தி கனகராஜேஸ்வரி உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட தோழர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள் .
6.CEA வை பொறுத்தவரை மாதம் ரூபாய் 2250 என கணக்கிட்டு அனைவர்க்கும் கொடுக்கப்படும் .ஏற்கனவே CEA வாங்கிருந்தாலும் 17.07.2018 உத்தரவு படி அனைவர்க்கும் DIFFERENCE OF PAYMENT கணக்கிடப்பட்டு கோட்ட அலுவலகத்தில் இருந்தே PAYMENT குக்கான SANCTION வழங்கப்படும் .தனித்தனியாக யாரும் விண்ணப்பிக்க தேவையில்லை .
7.ATR நிரப்புவதற்கான TRANSFER கமிட்டி அடுத்தவாரம் கூடுகிறது .
TREASURY யில் பணியாற்றும் LSG ஊழியர்களின் இடமாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் .
8.பாளையம்கோட்டை  தலைமை அஞ்சலக கட்டிட பராமரிப்பு பணிகள் குறித்து சிவில் விங் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது 
9.தொண்டர் பஜார் அலுவலகத்திற்கு இடம் கொடுக்க விரும்பும் உரிமையாளருக்கு வாடகை நிர்ணயம் சம்பந்தமாக கடிதம் அனுப்பப்படும் .
10.01.01.1986 க்கு முன்பு பயிற்சிக்கு சென்ற ஊழியர்களின் பயிற்சிக்காலத்தை TBOP /BCR கணக்கீட்டிற்கு எடுக்கும் உத்தரவிலும் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது .இதனால் பல மூத்த தோழர்கள் (குமாரி விஜயராணி ராஜகுமாரி சுடலையாண்டி சுப்ரமணியம் ) பயன்பெறுவார்கள் .
11.UPS பேட்டரி மற்றும் ஜெனெரேட்டர் பிரச்சினைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது .விரைவில் புதிய பேட்டரிகள் கிடைக்கும் .
12 விடுபட்ட இரண்டு ஊழியர்களின் CEA BILL தோழர் சரவணன் தோழியர் கிருஷ்ணவேணி தபால்காரர்கள் சங்கர்நகர் ஆகியோருக்கு கோவில்பட்டி கோட்ட அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்கள் பெறப்பட்டு ON THE SPOT  இருவருக்கும் BILL SANCTION செய்யப்பட்டுவிட்டது .
                  ஆட்பற்றாக்குறை டெபுடேஷன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது .இருந்தாலும் விடுப்பு வழங்குவதில் எந்த தாமதமும் இல்லாமல் வழங்கப்படுவதாகவும் RULE 38 யில் ஊழியர்கள் வரும்பொழுது புறநகர் பகுதிகளில் அவர்களை பணியிடமாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
            மேலும் முழு விவரங்கள் நடவடிக்கை குறிப்புகள் கிடைத்தவுடன் உங்கள் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
  

0 comments:

Post a Comment