...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, October 29, 2018

                                                    நெல்லை கோட்ட செய்திகள் 
தபால்காரர் /MTS மூலம் எழுத்தர் பதவிக்கான தேர்வு டிசம்பர் 9 ம் தேதி நடைபெறுகிறது .தகுதியுள்ள தோழர் /தோழியர்கள் உடனே விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .இதற்கான பயிற்சி வகுப்புகள் முன்னாள் ASP OD (RETD) திரு .பாலசுப்ரமணியன் அவர்கள் பாளை சமாதானபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் மாலை 4-7 வரை நடத்துகிறார்கள் .ஆர்வமுள்ள தோழர்கள் 94421 49339 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள கேட்டு கொள்ள படுகிறார்கள் .ஏற்கனவே திரு .பாலசுப்ரமணியன் அவர்கள் ஞாயிறு தோறும் திருச்சியில் வகுப்புகளை நடத்திக்கொண்டிருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
-------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு டிசம்பர் திங்கள் 29 மற்றும் 30 (சனி மற்றும் ஞாயிறு ) ஆகிய நாட்களில் நடைபெறுகிறது .தோழர்கள் SK .பாட்சா புஷ்பகரன் முருகேசன் சாக்ரடீஸ் சுபாஷ் செல்வின் அமிர்தராஜ் மகேந்திரன் பாலகுருசாமி ஆகிய அஞ்சல் நான்கு தோழர்களும் அஞ்சல் மூன்று சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் பிரபாகர் குத்தாலிங்கம் சாகுல் இளங்கோ மற்றும் குருசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தோழர்கள் இன்றே தங்கள் பெயரினை பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர் கோட்ட செயலர் தோழர் செல்வகுமார் அவர்களின் பதிவு 
தோழர்களே epaymenல் TNEB bill கட்டினால் இணைப்பை துண்டிக்கிறான். அதற்கு அபராதம் வேறு TNBSNL bill கட்டினால் இணைப்பை துண்டிக்கிறான். eMo book பண்ணினால்  பணம் அனுப்பியவன் திட்டுறான்.  பண்ணாவிட்டால் நீ எதுக்கு ஒரு பெட்டியை(computer) வச்சுக்குட்டு சும்மா உட்கார்ந்து இருக்கேங்கிறான். அவன் எதிரே இருக்கும் SPM பாடு திண்டாட்டம் தான். இதுதான் இன்றைய இழிநிலை. இதற்கு தீர்வு யாரிடம் இருக்கு என்று நம் அலுவலர் எவருக்கும் தெரியவில்லை. இதில் இலாக்கா நஷ்டத்தில் ஓடுதுன்னு ஒப்பாரி வேறு. இருப்பதை கெடுப்பதுதான் இவர்களின் வேலை வருபவர்களிடம் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாவது தான் நம் வேலை. நல்ல முன்னேற்றம் கடந்த பத்து வருடங்களில் இலாக்காவில் மாற்றங்கள் ஏராளம் ஆனால் ஊழியர்களின் மனகஷ்டங்கள் தாராளம். எல்லோரும் விடியலை தேடுவோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------மாநில சங்க அறிக்கையில் இருந்து .......
ஆட்பற்றாக்குறை பிரச்னை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. ஆளெடுப்பு, உயர் பதவிகளை நிரப்புவதற்கு அடிப்படை விதிகளை தளர்த்துதல் ஆகியவற்றில் நாம் கடந்த 6.9.18 ல் DG அவர்களை நமது பொதுச்செயலருடன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பிரச்னைகளை விளக்கிப் பேசிய பின்னும் இவற்றில் எதிர்பார்த்த வேகமான முன்னேற்றமில்லை.

ஆட்பற்றாக்குறை தீர்வுக்கு தற்காலிக தீர்வாக விருப்பமுள்ள,
தகுதியுள்ள  தபால் காரர், MTS, GDS இவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்வதில் இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு உத்திரவு வழங்கிட 
DG யிடம்கடந்த 6.9.18 அன்று மனு அளித்துப் பேசினோம். அதில் முடிவெடுக்க இலாக்கா தயங்குகிறது.

இதனையே கடந்த 28.9.18 ல் நடைபெற்ற தமிழக RJCM கூட்டத்திலும் CPMG மற்றும்இதர PMG க்கள் அடங்கிய கூட்டத்தில் இதனை வலியுறுத்திப் பேசினோம். அப்போது பரிசீலிப்பதாக தெரிவித்தவர்கள் தற்போது அதற்கு சட்டரீதியாக Offg Pay வழங்குவதில் சிக்கல் இருப்பதாலும் CSI Environment ல் இவ்வாறு செய்திட பிரச்னை உள்ளதாகவும் அதனால் இந்த ஆலோசனையை செயல்படுத்த 
இயலாது என்றும் தெரிவித்துள்ளார்கள். 
ஆட்பற்றாக்குறையோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பிரச்னைகளோ நாளுக்கு நாள் பெருகிவருகிறது. 

நம்முடைய மாநிலச் சங்கத்தின் தொடர் முயற்சியால் இந்த நிதியாண்டில் புதிய கணிகள் பெறுவதற்கு 2250 கணிகளுக்கு நிதி ஒதுக்கீடு நமது துறையிலிருந்து பெற்ற போதும் கணிணி வழங்குவதில் GeM Port ல் order place செய்து கணிணி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரலிலேயே நிதி ஒதுக்கீடு பெற்றதாக நமக்கு RJCM ல் பதில் அளித்திருந்தும் இதுவரை இதில் மெத்தன நடவடிக்கையே உள்ளது. முன்னேற்றமில்லை. 

நிலைமைகள் இவ்வாறிருக்க IPPB, RICT, Target என பிரச்னைகள் நாளுக்கு நாள் கண்மூடித்தனமாக பெருகிவருகின்றது. 

எனவே உடனடியாக இவையும், இவை போன்ற இதர  பிரச்னைகளின் மீதும் உடனடியாக தீர்வு கோரி மாநில அளவில் மீண்டும் நாம் போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டுமென 
பல மாநிலச் சங்க நிர்வாகிகள் கோரியதன் அடிப்படையில் இன்று நமது அஞ்சல் மூன்று மாநிலத் தலைவருடன் கலந்து பேசினோம். அவரும் இதன்மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். எனவே நவம்பர் முதல் வாரம் முதல் நமது பிரச்னைகளின் மீது பல கட்ட போராட்டங்களை தமிழ் மாநில அஞ்சல் 
மூன்று சங்கம் அறிவித்து நடத்திட முடிவெடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 0 comments:

Post a Comment