...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 2, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                 அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் வருகிற 21.10.2018 அன்று சேலத்தில் நடைபெறுகிறது .மறைந்த தலைவனின் நினைவு நாளினை ஒட்டி அந்த மாவீரரின் பெருமைகளை நாம் அசைபோட்டு பார்ப்பது வருங்காலத்தில் மீண்டும் அஞ்சாநெஞ்சன் காலங்களை போல் அஞ்சல் எழுத்தர்கள் தலைநிமிர்ந்து நடந்திடவேண்டும் -அதிகார தாக்குதல்களை எதிர்த்து போராட இளைய தலைமுறையினை நாம் அணி திரட்டிட வேண்டும்  என்ற அவசியம் இன்று இருக்கிறது . .அண்ணனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் வெளியிடப்பட்ட நினைவு மலரில் பல்வேறு தரப்பட்ட தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்தார்கள் .அதை ஒவ்வொன்றாக மறு பதிப்பு செய்திடும் பொருட்டு இந்த பதிவு வெளிடப்படுகிறது .முதலாவதாக அண்ணனின் கோட்டத்தில் அவருக்குப்பின் கோட்ட செயலராக பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றிய தோழர் .BALM .ஆனந்த ராஜ் அவர்களின் கட்டுரையில் இருந்து ...அவசரகாலக் சட்டம்  (மிசா ) நடைமுறையில் இருந்த நேரம் கன்னியாகுமரிக்கு அன்றைய DPS திரு .வரதன் அவர்கள் வந்திருந்தார் .DPS வருகையை முன்னிட்டு அன்றைய குமரி கோட்ட செயலர் அண்ணன் பாலு அவர்களால் தயாரிக்கப்பட்ட மெமோரண்டம் கொடுக்க அனுமதி கேட்கப்பட்டது .DPS அவர்களோ நேரமில்லை நேர்காணல் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டார் உடனே அன்று மாலையே ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு  சுசீந்திரம் கோவிலுக்கு வடமாலை .சாத்த நேரமுண்டு ஊழியர்களின் பிரச்சினையை பேச நேரமில்லை என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது .ஊழியர்களின் எழுச்சியை கண்ட நிர்வாகம் இறங்கி வந்து பேட்டி கொடுக்க சம்மதித்தது .DPS அவர்களுடன் பேட்டியும் நடந்தது அதிகாரிகளின் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சாதவர் அண்ணன் பாலு அவர்கள் .
 அண்ணனின் வீரத்திற்கு சான்றாக சேக்ஸ்பியர் அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகிறது .
  : Cowards die many a time before their death but the Valiant never tastes death but once :
              ------- BALM .ஆனந்தராஜ் முன்னாள் மாநில உதவி தலைவர் ---
நன்றி .தொடரும் தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment