...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 24, 2018

அன்பார்ந்த தோழர்களே !
    மீண்டும் அஞ்சலகத்தில் நெட்ஒர்க் பிரச்சினை தலைவிரித்தாட தொடங்கிவிட்டது .SAP கிடைக்கவில்லை என்றால் EXCELL மூலம் பணிசெய்ய ஊழியர்கள் பணிக்கப்படுகிறார்கள் .வழக்கம்போலவே நிர்வாகமும் TCS TEAM அதை சரிசெய்து கொண்டிருகிறார்கள் என்ற ரெடிமேட் பதிலை தந்துகொண்டிருக்கிறது .ஊழியர்களின் மனஉளைச்சல் ஒருபுறம் -அஞ்சல் துறையின் மீதுள்ள நம்பிக்கை பொதுமக்களிடம் இருந்து மெல்ல மெல்ல தகர்ந்து வருவது ஒருபுறம் --TCS நிர்வாகத்தை தட்டிக்கேட்கவோ உத்தரவிடவோ அஞ்சல்துறையின் மேல்மட்டங்கள் தயங்குவது ஏன் ?ஏன் ?
------------------------------------------------------------------------------------------------------------------
பதவி உயர்வில் வந்தவர்களுக்கு புதிய பதவியில் உள்ள ஆரம்பநிலை ஊதியத்தில் தான் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் Dop order no 7-2/2016-pcc regarding entry pay dated at dak bhawan the 03.10.2018
இதன் அடிப்படையில் திருப்பூர் கோட்டத்தில் இரண்டு ஊழியர்களுக்கு ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது -6வது ஊதியகுழு 01.01.2006 முதல் அமலாக்கப்பட்டபோது 01.01.2006க்கு முன்பு 2004,2005 ஆண்டுகளில்  தபால்காரரர்களாக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் 01.01.2006 பின் பணிநியமனம் செய்யப்பட்ட தபால்காரர்களை விட குறைவான ஊதியம் பெற்று வந்தனர். அதாவது 01.01.2006 பிறகு பணிநியமனம் பெற்ற  தபால்காரர்களுக்கான தொடக்க ஊதியம் ரூ8460. ஆனால் 30.12.2005 க்கு முன்பு பணிநியமனம் செய்யப்பட்ட தபால்காரர்களுக்கான ஊதியம் ரூ8060 மட்டுமே. இதனால் சீனியர்கள் ஜூனியர்களை விட குறைவான ஊதியம் கடந்த 12 ஆண்டுகளாக பெற்று வந்தனர். இது குறித்து 6வது ஊதியக்குழுவின் ANOMALY COMMITTE யிடம் NFPE சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. பல ஊழியர்கள் நியாயம் கேட்டு நிர்வாக தீர்ப்பாயம் , நீதிமன்றங்களை நாடி சாதகமான தீர்ப்பு பெற்றும்  ஊதிய முரண்பாடுகள் களையப்படாமல் இருந்து வந்தது.  ஊழியர்கள் தரப்பின் கோரிக்கையின் பயனாக ஊதிய முரண்பாடுகளை தீர்க்க
28.09.2018ல் மத்தியநிதி அமைச்சகம் அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் பொருந்தக்கூடிய உத்தரவு வெளியிட்டது. நமது கோட்டத்தில் ஏற்கனவே நாம் STEPPING UP மூலம் சில உயர்வுகளை பெற்றிருந்தாலும் ஆரம்ப ஊதியமே இங்கு மாற்றப்படவிருக்கிறது .இது குறித்து இந்த மாத மாதாந்திர பேட்டியில் இது குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது 
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்தமாத மாதாந்திர பேட்டி 26.10.2018 மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக 
தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் -V .சரவணன் பாளை --RV.தியாகராஜ பாண்டியன் அம்பை ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 







0 comments:

Post a Comment