...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 30, 2018

அன்பார்ந்த தோழர்களே !
       பற்றி எரியும் SAP/CSI/RICT தொடர்பான பிரச்னைகளைத் தீர்த்திட,
                            மூன்று கட்ட போராட்ட இயக்கங்கள் 
1. 29.10.18 முதல் 3.11.18 முதல் கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றுவது /உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 
2.13.11.18 செவ்வாயன்று நான்கு மண்டல அலுவலகங்கள் முன்பு தர்ணா 
3.04.12.2018 செவ்வாயன்று மாநில நிர்வாக அலுவலகம் 
(o/o CPMG, TN) முன்பாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 03.12.2018 திங்கள்  மாலை 6.00 மணி முதல் மறுநாள் செவ்வாய் மாலை 6.00 மணி வரையிலான, 3ந் தேதி  இரவு அங்கேயே தங்கும் வண்ணம் 24 மணி நேர தொடர் தார்ணா 
 ( மதுரை மற்றும் சென்னை தர்ணாவில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் இன்றே உங்கள் பெயரினை பதிவு செய்திட கேட்டுக்கொள்கிறோம் )
                                                              கோரிக்கைகள் 
 IPPB மற்றும் இதர 
BD பணிகளில் கண்மூடித்தனமான Target நிர்ணயித்து ஊழியர்கள் கசக்கிப் பிழியப்படுவதை உடனே தடுத்திட, 
ஊதியம், GPF, TA Advance மற்றும் இதர பணப்பயன்களை வழங்குவதில் 
CSI HR Module அறிமுகப்படுத்தி அனைத்துப் பணிகளையும் DPA வில் குவியப்படுத்தி வருவதால் ஏற்படும் தாமதம் மற்றும் பிரச்னைகளைத் தீர்த்திட, 
. அகில இந்திய 
PJCA (NFPE/FNPO) முடிவினை ஏற்று உத்திரப்பிரதேசம் அலகாபாத் தலைமை அஞ்சலகத்தில் SAP இயங்காததை எதிர்த்து இலாக்காவுக்கு எதிராக போராடுவதை விடுத்து - அங்கு பணிபுரிந்த அப்பாவி ஊழியர்களைத் தாக்கி அவர்களது 'பைக்' உள்ளிட்ட உடைமைப் பொருள்களை எரியூட்டி,  அலுவலகத்தை சூறையாடிய வழக்கறிஞர்கள் 
என்ற பெயரிலான வன்முறையாளர்களைகண்டித்தும், அவர்கள் மேல் உரிய 
சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், 
இதன் தொடர்பான பிரச்னைகளை  உடன் தீர்த்து வைத்திட இலாக்காவை வலியுறுத்தியும் நடைபெறும் இயக்கங்களில் நாம் முழுமையாக பங்கேற்போம் .

பிரச்னைகள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்குள் தீர்க்கப்பட வில்லையெனில்,  மூன்றாவது கட்டப் போராட்டமாக தமிழகம் தழுவிய அளவில் அனைத்து NFPE உறுப்புச் சங்கங்களும் கலந்து கொள்ளும் வண்ணம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திட வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

. வேலைநிறுத்த தேதி இரண்டாவது கட்ட போராட்டமாகிய 24 மணி நேர தொடர் தார்ணா போராட்ட முடிவில் அறிவிக்கப்படும். 
அதன் தொடர்ச்சியாக மண்டலங்கள் தோறும் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடத்தப்படும. 
                                         போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்   SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
~~~~~~



0 comments:

Post a Comment