...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, October 8, 2018

                              உலக அஞ்சல் தினம் -அக்டோபர் 9 
உலக அஞ்சல் தினம் (World Post Dayஅக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.09.10.1874.  இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கடைபிடிக்கபடுகிறது . மொத்தம் 150க்கு  மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் உலக அஞ்சல் தினத்தை  கொண்டாடுவதை குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது..
தகவல் தொடர்பின் ஆரம்பம் முதலில் கை சைகைகள் தொடங்கியது .பின்னர் ஆட்கள் -விலங்குகள் பறவைகள் என அதன் சிறகுகள் விரிய தொடங்கின .அஞ்சல் என்ற சொல் ஆங்கிலத்தில் POST என்றும் அது பொசிட்டியோ (POSITIO) என்ற லத்தின் வார்த்தையில் இருந்து வந்தது என்றும் அறியப்படுகிறது ..முதன் முதலில் ரோம் திருச்சபைகளில் தான் POST என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது .ஆரம்பத்தில் இந்தியாவில் சிந்து சமவெளி மக்கள் ஊதுகுழல் மற்றும் ஒலி எழுப்பி மூலம் தகவல்களை பரிமாறி இருக்கின்றனர் .வேத காலங்களில் செய்திகளை அனுப்ப குழுக்கள் அமைக்கப்பட்டன .சந்திர குப்தர் காலம் முதல் அக்பர் காலம் வரை புறா கால்களில் சிறு தாயத்துடன் கட்டி அனுப்பியிருக்கிறார்கள் .முகலாயர் ஆட்சி காலத்தில் தான் சாலைகளை அமைத்து அதன் மூலம் செய்தி பரிமாற்றம் (ஆக்ரா முதல் காபூல் வரை ) நடைபெற்றது .ஷெர்ஷா சூரி ஆட்சிக்காலத்தில் தகவல் பரிமாற்றத்தில் இருந்தவர்களை செரியஸ் (SERAIS) என்று அழைக்கப்பட்டனர் .முகலாயர் ஆட்சி காலத்தில் 3400 குதிரைகள் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டன .அதன் பின் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் அஞ்சல் சேவை புதிய பரிமாணத்தை பெற்றது .ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1764-1766 வரை அஞ்சல் சேவை மையத்தை சென்னை மும்பை கல்கத்தா போன்ற பெருநகரங்களில் அமைக்கப்பட்டது .அஞ்சல் சேவையின் கவர்னராக வாரன் ஹாஸிங் பதவி ஏற்றபின் இன்னும் விரிவுபடுத்தப்பட்டது .1766 யில் ராபர்ட் கிளைவ் ஆட்சி காலத்தில் இருந்தே படிப்படியாக அஞ்சல் சேவை விரிவுபடுத்தப்பட்டு 1786 யில்  சென்னை பொது அஞ்சல் நிலையம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை மையமாக வைத்து செயல்பட்டு அதன் கீழ் பல்வேறு கிளை அஞ்சலகங்கள் உருவாக்கப்பட்டது .
பாரம்பரியம் மிக்க பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலியும்  கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ தலைமையிடங்களில் ஒன்றாக  இருந்தது .ராணுவ தலைமையகத்திற்கு அருகில் அஞ்சலகமும் செயல்பட்டிருந்தது .
ஆங்கிலேயருக்கும் பாளைய காரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது அங்கு தான் அஞ்சலகம் -ராணுவ தலைமையகமும் சேர்ந்து செயல்பட்டது.அதுதான் பாளையம் -பாசறை என மாறி பாளையம்கோட்டை ஆனது . ..பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 150 வருட வரலாறு கொண்டது .இதை  பேராயர் ராபர்ட் கால்டுவெல் தனது திருநெல்வேலி சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளார் .திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் சுதந்திரத்திற்கு பின் உருவானது .இதை தான் திருநெல்வேலி (இந்த் ) என அழைக்கிறோம் .அதன் முழு அர்த்தம் திருநெல்வேலி (இந்தியா ) ஆகும் .
தற்சமயம் நாடு முழுவதும் 154939 அஞ்சலகங்கள் உள்ளன .
அஞ்சல் சேவையின் சிறப்பு இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டுள்ளது மட்டுமல்ல வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது .
பரிசுத்த வேதாகமத்தில் யோபு என்ற அதிகாரம்   9-25  என்ற வசனத்தில் என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்தைப்போல தீவிரமாயிருக்கிறது ( Now my days are swifter than post --JOB 9-25)என்று தனக்கு வரும் கடைசி நாட்களின் தீவிரம் குறித்து எழுதப்பட்டுள்ளது .இதில் இருந்து பார்த்தால் கூட அஞ்சல் சேவை எத்தனை பழமையானது -எத்தனை புனிதமானது -எத்தனை பெருமையானது என்பது விளங்கும் .பெருமைகொள்வோம் பாரம்பரியமிக்க -அப்பழுக்கற்ற அஞ்சல் துறையில் பணியாற்றுவதை பிறவி பயன் என்போம் .நன்றி .அனைவருக்கும் தேசிய அஞ்சல் வார வாழ்த்துக்களை நெல்லை NFPE தெரிவித்து கொள்கிறது .
இந்த திருநெல்வேலி மண்ணின் வீரத்தை உலகெங்கும் பரவ செய்த மாமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு 16.10.1999 அன்று சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டு கௌ ரவிக்கப்பட்டது .அது உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது .(தொடரும் )
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் - கோட்ட செயலர் நெல்லை .

0 comments:

Post a Comment