...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 31, 2019

நம்முடைய வாழ்த்தினை பெற்று நமக்கு பதி(வி )லிட்ட மாநில செயலருக்கு நன்றி !நன்றி !

முத்தான கவிதை ; 
முத்தாய்ப்பாய் கவிதை;
உதட்டு மொழியல்ல ;
உணர்வின் வழியது;
நட்பு நெஞ்சாம் குழியது.

அன்புத் தம்பியே !
ஆற்றலேறே !
நன்றி உனக்கு...
விடைபெறவில்லை விடுபடுகிறேன்இன்று...

"உனக்கொரு பங்கு 
எனக்கொரு பங்கு 
உலகில் நிச்சயம் உண்டு..

ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு"
என் தலைவன் சொன்னது அன்று. 

காலமிருக்கு 
கவலை எதற்கு ? 
தடம்பதிப்பாய் .. 
தகுதி உனக்குண்டு..
வாழ்த்துகிறேன் நானின்று... 

அன்புடன், 
அண்ணன் காட்டிய வழியில் ஜெ. ஆர்.

இன்று பணிநிறைவு பெறுகின்ற தோழியர் C .ராணி அன்பரசி  SPM மேலப்பாளையம் பஜார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 

ராணி அன்பரசி --
ஏட்டில் மட்டுமல்ல --
வீட்டிலும் நீங்கள் ராணி தான் 

ஆரம்பம் முதல் இன்றுவரை 
NFPE யின் அடிப்படை உறுப்பினர்தான் 
ஆனாலும் எந்த சூழலிலும் 
NFPE யை விட்டு கொடுத்திடாத தோழியர் 

வேலைநிறுத்தங்களில் ஆர்வத்தோடு பங்கேற்றவர் 
பணிஓய்வின் கடைசி மாதத்திலும் 
போராட்டத்தில் பங்கேற்ற புரட்சி தோழியர் 

மாநாடுகளில் தவறாமல் பங்கேற்பதும் 
எங்களை தொடர்ந்து ஆதரித்தவர்களில் 
நீங்களும் ஒருவர் 

அதிகாரிகளின் அச்சுறுத்தல்களை 
அலட்சியமாக சந்தித்தவர் 
கெடுபிடி காலங்களிலும் 
பதட்டமில்லாமல் பணியாற்றியவர் 

தங்களின் பணி ஓய்வு காலங்கள் 
சிறக்க வாழ்த்துகிறோம் .
                                                     தோழமையுடன் 
                                                       SK .ஜேக்கப் ராஜ் 
                                                    கோட்ட செயலர் நெல்லை 


                                                        NFPE 
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -குரூப் C 
திருநெல்வேலி கோட்டம் --627002

அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில செயலர் அண்ணன் JR அவர்களுக்கு பணி நிறைவு வாழ்த்துக்கள் 

நாள் 31.01.2019              இடம் சென்னை 
                                              மாயவரம் தந்திட்ட மகத்தான  தலைவன் 
பந்தா -பகட்டு ஏதுமின்றி பணியாற்றிய தோழன் 
ஆயிரம் தான் விமர்சனங்கள் வந்தாலும் 
அத்தனையையும்  மென்று ஏப்பமிட்ட அன்பு சால் தோழன்  

மாயவரத்தில்  தொழிற்சங்க ஆரம்ப கல்வி என்றால் 

சிந்தாதரிபேட்டையில் பட்ட படிப்பை முடித்தவன் !
துறவறத்தில் எட்டாண்டுகள் கழித்திருந்தாலும்  -எளிதில்  
எவரும் எட்டாத சாதனைகளை படைத்தவன்

ஞாயிறுகளில் MPCM மற்றும் SPEEDPOST  என்ற 

அகங்கார சட்டத்தை உடைத்து காட்டியவன் 
அலுவலகமுடல் என்ற பழைய நிலை திரும்பாமல் 
அஞ்சலகங்களை  காத்து கொடுத்தவன் 

 -பயிற்சி மையத்தில் இடமில்லை என்றபோதிலும் 

எழுத்தர்களுக்கு   IN -HOUSING பயிற்சியை நடத்தி காட்டியவன் 
பண்டிகை நாட்களிலும் பயிற்சியாளர்கள் 
ஊருக்கு செல்ல கூடாது என்ற கொடுமையை 
தடுத்து நிறுத்தியவன் 

காலிப்பணியிடங்கள் இல்லை என்ற கூற்றை 

பொய்யாக்கி 2012 யில் 
 அறுநூறு  எழுத்தர் பதவிகளை எடுத்து காட்டியவன் 
RESIDUAL VACANCY மூலம் எண்ணற்ற 
ED ஊழியர்களை எழுத்தராக்கி அழகு பார்த்தவன் 

RICT என்றாலும் CSI என்றாலும் 

அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல் 
தமிழகத்தில் அனுமதிக்கமுடியாது என்று 
தடையானையை தக்கவைத்தவன் 

கேடர் சீரமைப்பு கேடு விளைவிக்கும் என்ற 
கேலி  பேச்சை பொய்யாக்கி 
கேட்பவர்களுக்கு கேட்ட இடத்தையும் 
மறுத்தவர்களுக்கு மேலும் புது 
வாய்ப்புகளையும் வாரி வழங்கியவன் 

கணக்கில் விடுபட்டதை கவனமாக கையிலெடுத்து 

பலநூறு எழுத்தர் இடங்களை பெற்று தந்தவன் 
கனவிலும் நினைக்காத இளையவர்களுக்கு -ஒரே இரவில் 
விதி 38 யில் சொந்த ஊருக்கு  அனுப்பி வைத்தவன் 

விடுபட்ட இடங்களையும் 

புள்ளி விவரங்களோடு அள்ளி வீசி 
போதிய விதிகளை -சுட்டி காட்டி 
  புதிய பதவிகளுக்கு அடித்தளத்தை விட்டு சென்றவன் 

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உன்னிடத்தில் உண்டு 

ஆழமான விவாதங்கள் அதிகம் உண்டு 
அடுக்கடுக்கான கேள்விகள் அதிலும் உண்டு 
அதிகாரிகளை அசர வைக்கும் ஆற்றலும் உனக்குண்டு 
எல்லாரும் சொல்வதைப்போல 
உன் இடத்தை நிரப்ப யார் உண்டு 

நுனி நாக்கு ஆங்கிலம் 
தனி ஆளாய் நீ காட்டிய ஆலாபனம்  
எடுத்துக்காட்டுக்கு வரலாறு 
எதெற்கெடுத்தாலும் MGR பாட்டு -என 
சலிப்பில்லாத உன் உரையாடல் -என்றும் 
புளிப்பில்லாத உன்னத கருத்துரைகள் 
இவைகளெல்லாம் உனக்கே சொந்தம் 

மாற்றான் தோட்டத்து மல்லிகை அல்ல -நீ 

மாற்று கருத்துள்ளோரையும் விரட்டி 
பி (அ )டிக்கும் எண்ணமும் உனக்கு இல்லை  
ஒருகூட்டு பறவைகள் நாம் -இங்கே 
எத்தனைபேருக்கு தெரியும் 
ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் நாம் என்று !


வாழ்த்துகிறேன் ! உளப்பூர்வமாய் போற்றுகிறேன் !

அண்ணன் பாலுவின்  அரவணைப்பில் வளர்ந்திட்ட 
உன்னை வாழ்த்துகிறேன் ! போற்றுகிறேன் !
                                            தோழமையுடன்-- SK .ஜேக்கப் ராஜ் --











Wednesday, January 30, 2019

  அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
மத்திய அரசு பணிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு  10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவை  23.01.2019 அன்று அஞ்சல் வாரியமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .
 --------------------------------------------------------------------------------------------------------
தமிழக அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லையில் ஆர்ப்பாட்டம் 
நாள் --30.1.2019      இடம் -பாளையம்கோட்டை HO முன்பு 
நேரம் மாலை 6. மணி 
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மிக வலுவாக வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வரும் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை மிரட்டியும், அராஜக நடவடிக்கையில் இறங்கி உள்ள மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறோம் .உழைக்கும் மக்கள் எத்திசையில் போராடினாலும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்குவது நம் வர்க்க உணர்வின் வெளிப்பாடு .ஆகவே நெல்லை அஞ்சல் ஊழியர்கள் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
 வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை 

Tuesday, January 29, 2019

                                            வருந்துகிறோம் 
தோழியர் பவானி PA வண்ணார்பேட்டை அவர்களின் தாயார் திருமதி காந்திமதி (73) அவர்கள் நேற்றிரவு இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று (29.01.2019 ) காட்பாடியில் நடைபெறுகிறது .தாயாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு NELLAI NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது -
                        ---------------------------NFPE NELLAI ------------------------------------

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
  நேற்று மேலும் இரண்டு தோழர்கள் ரூல் 38 இன் கீழ் நெல்லைக்கு வருகிறார்கள் .அவர்களை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .
1.தோழர் ரவி (PSD) 2.தோழியர் வனஜா (தேனி )
மூன்று தபால் காரர் தோழர்களையும் வரவேற்கிறோம் 
1.தோழர் .இசக்கியப்பன்(கன்னியாகுமரி 
2.தோழர் மெர்வின் (தஞ்சை )
தோழர் உதயகுமார் (சேலம் கிழக்கு ) 
            கண்காணிப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு 
நேற்று (28.01.2019 ) மாலை நமது கண்காணிப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது .இதில் RULE 38 யில் வரும் ஊழியர்களை அவர்களின் விருப்ப தெரிவினை கருத்தில்கொண்டு இடமாற்றம் செய்திட கேட்டுக்கொண்டோம் .ஆகவே இடமாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் ஊழியர்கள் நெல்லையில் தங்கள் இருப்பிடம் /குடும்ப சூழ்நிலை இவைகளை குறிப்பிட்டு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
அம்பாசமுத்திரம் பகுதி காலியிடங்கள் 
அம்பாசமுத்திரம் HO -ஆழ்வார்குறிச்சி -சேரன்மகாதேவி -கல்லிடைக்குறிச்சி -பாப்பாக்குடி -பாபநாசம் மில்ஸ் -பத்தமடை -பொட்டல்புதூர் -ராவணசமுத்திரம் -வீ .கே .புரம் 
திருநெல்வேலி பகுதி  
கங்கைகொண்டான் -பேட்டை -மானுர் -
பாளையம்கோட்டை பகுதி 
பர்கிட்மாநகரம் -களக்காடு -மூலைகரைப்பட்டி -முனைஞ்சிப்பட்டி 
நான்குனேரி -ராதாபுரம் -தெற்கு கருங்குளம் -திசையன்விளை -
வடக்கன்குளம் -வள்ளியூர் 
                                                           --------------
சென்ற மாதத்திற்க்கான மாதாந்திர பேட்டியின் MINUTES நேற்று வந்துள்ளன  டெபுடேஷனை பொறுத்தவரை ஒருவர் டெபுடேஷன் முடித்து தலைமை இடம் வந்த பிறகுதான் அவருக்கு அவரது வரிசைப்படி அடித்த டெபுடேஷன் என்ற வழிகாட்டுதல்கள் இன்று பிறப்பிக்கப்படும் .முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் 
                                      நன்றி .
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை 

Monday, January 28, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                                      RULE  38 யில்  நெல்லைக்கு  31
நமது NFPE P 3 மாநில சங்கத்தின் தொடர் முயற்சி 
விடாத வற்புறுத்தல்  காரணமாக தமிழக அஞ்சல் துறை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு நூற்றுக்கணக்கான புதிய /இளைய தோழர்களுக்கு விதி 38 யில் கீழ் கோட்டம் விட்டு கோட்டம் இடமாறுதல்கள் கிடைத்துள்ளது .ஆம் 25.01.2019 அன்று அந்த உத்தரவு வெளியி டப்பட்டுள்ளது .அதன் அடிப்படையில் நமது கோட்டத்திற்கும் 31 தோழர்கள் வருவது என்பது சாதரண விஷயமல்ல .அதிலும் சுமார் 26 தோழர்கள் நமது NFPE சங்கத்தை சார்ந்தவர்கள் என்பது மென்மேலும் பெருமைப்படும் விசயமாகும் .நெல்லைக்கு இட மாறுதல் பெற்று வரும் அனைத்து சொந்தங்களையும் வருக ! வருக ! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம் .இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நமது மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
                                         NELLAI NFPE WHATSAPP 
உத்தரவு கிடைத்த நாளில் இருந்தே14 தோழர்களை நமது NFPE WHATSAAPP குரூப்பில் இணைத்துள்ளோம் .மீதமுள்ளவர்களை இன்று சேர்த்திடுவோம் .அதற்கிடையில் இப்பொழுதே 256/257 பேர் இருப்பதால் சில வெளிக்கோட்ட நண்பர்களை  NFPE I யில் இருந்து NFPE II வாட்ஸாப்ப் யில் இணைக்கிறோம் .ஆகவே யாரும் தவறாக நினைத்திடவேண்டாம் .NELLAI NFPE I மற்றும் NELLAI NFPE II நெல்லை இரண்டிலும் அனைத்து தகவல்களும் பரிமாறப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
                          புதிதாக NELLAI NFPE வாட்ஸாப் தளத்தில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்போம் 
1.தோழர் .வினோத்-ராமநாதபுரம் 
2.தோழியர் சண்முக சுந்தரி கோவில்பட்டி 
3.தோழியர் துளசி சேலம் கிழக்கு 
4.தோழர் சேக் பீர் முகமது நாகை 
5.தோழியர் ஞானேஸ்வரி தூத்துக்குடி 
6.தோழியர் பூர்ணிமா நாகை 
7.தோழியர் சிந்து திருப்பூர் 
8.தோழர் சங்கர் கணேஷ் கோவில்பட்டி 
9.தோழர் சண்முக சுந்தரம் திண்டுக்கல் 
10.தோழர் மணிகண்டன் பட்டுக்கோட்டை 
11.தோழியர் செல்வி தேனி 
12.தோழியர் சுதா ராணி கரூர் 
13.தோழியர் பார்வதி பாண்டிச்சேரி 
14.தோழர் .பாலகிருஷ்ணன் கோவில்பட்டி 
            தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                  

Friday, January 25, 2019

அன்பார்ந்த தோழர்களே !
  இறுதியாக cash handling allowance  குறித்து அஞ்சல் வாரியம் 22.01.2019 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது .இது குறித்து நாம் ஏற்கனவே நவம்பர் மாத மாதாந்திரபெட்டியிலேயே  விவாதித்திருந்தோம் .
3.As per the recommendation of the 7th CPC, Treasury allowance was subsumed with ‘Cash handling allowance’ vide Dte F No. 4/6/2017-Estt (Pa-II) and hence it is requested to draw cash handling allowance to all SPMs of B & C Class offices and Treasurers under Tirunelveli Division w.e.f 01.07.2017.
ஆகவே தோழர்கள்  இதற்கான  statistics யை அனுப்பி 01.07.2017 முதலான பணபயன்களை  பெறுமாறு மீண்டும் நினைவு படுத்துகிறோம் .இதற்கான  மாதிரி  படிவத்தினை  பெற விரும்புகிறவர்கள்  நமது முன்னணி தோழர்  இயற்கை ஆர்வலர் கோபால்   PA ஏர்வாடி (8072056140) அவர்களை  தொடர்பு கொள்ளவும் . 
  வெல்லட்டும் அரசு ஊழியர்கள் -ஆசிரியர் போராட்டம் 

 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25ஆம் தேதிக்குள் (வெள்ளிக் கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் புதனன்று (ஜன. 23) உத்தரவிட்டது. .இது குறித்த பத்திரிக்கை செய்தி 

எங்களுடைய 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையிலும் நாங்கள் அறிவித்த காலவரையற்ற போராட்டம் தொடரும். வெள்ளிக்கிழமை திட்டமிட்டப்படி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். வருகிற 26ஆம் தேதி நடைபெறும் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழுவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். 28ஆம் தேதி முதல் போராட்டத்தின் வடிவம் மேலும் தீவிரப்படுத்தப்படும்.எனவே தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றம் எங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. எங்களுடைய சங்கத்தில் இணைந்திருக்கின்ற ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை தொடரும். எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க நிதி இருக்கிறது. அரசை நல்ல முறையில் வழிநடத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுக்க நிதி இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
எங்களை வீதிக்கு போராட கொண்டு வந்தது அரசுதான். போராட்டத்தை தொடரவேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் இல்லை. ஜாக்டோ- ஜியோ தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வருகிற 28ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. அதனை பொறுத்து எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களுடைய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thursday, January 24, 2019

சென்னையில் 03.02.2019 அன்று நடைபெறும் மாநில கவுன்சில் கூட்டத்திற்கு சிறப்பு விடுப்பு வழங்குவதற்கான உத்தரவு 
Department of Posts, India   Staff Relations & Welfare Section
Office of the Chief Postmaster General, Tamil Nadu Circle, Chennai 600 002
Dated: 23rd Jan’

To

1.    The Postmaster General
     Chennai City/Central/Southern/Western Region
     Chennai 600 002 /Tiruchirappalli 620 001
     Madurai 625 002/Coimbatore 641 002.

2.  The Director, PTC, Madurai 625 022/Foreign Post, Chennai 600 001.

3.  The E.E, Civil Dn., Chennai 600 008/A.E, Electrical, Chennai 600 008.

4.  The Supdt., CSD, Chennai 600 004.

               Sub: Grant of Special Casual Leave for the Circle Council Members (Circle Office    Bearers & Councilors) for attending the Circle Council meeting            on 03  Feb’19 at World University Service Centre, Mayor Ramanathan Salai                  Presidency Girls Higher Secondary School, Chetpet, Chennai 600 031 – Reg.

     It has been intimated by the Circle Secretary, NFPE – All India Postal Employees Union Group – ‘C’, Tamil Nadu Circle that Circle Council meeting of their Union will be held on 03rd Feb’19 at World University Service Centre, Mayor Ramanathan Salai, Presidency Girls Higher Secondary School, Chetpet, Chennai 600 031.

      Necessary Special Casual Leave, if applied for may please be granted to the Circle Council Members (Circle Office Bearers & Councilors) on 03rd Feb’19 with actual journey time as per the standing instructions on the subject provisionally in accordance with the Union Constitution subject to regularization on production of certificate of attendance.  It may please be ensured that grant of Special casual leave should not exceed 20 days in a year.

     The Regional PMsG are requested to communicate the same to the all the Divisions/Units under their control.
                                               
(P.V. Balachander)
Assistant Director (Admin, SR & WLF)
O/o the Chief Postmaster General
T.N. Circle, Chennai – 600 002


Wednesday, January 23, 2019

அன்பார்ந்த தோழர்களே !
  குரூப் C மற்றும் குரூப் B (NON -GAZETTED ) ஊழியர்களுக்கான புதிய இடமாறுதல் வழிகாட்டுதல்களை அஞ்சல் வாரியம் 17.01.2019 அன்று வெளியிட்டுள்ளது .இது முந்தைய உத்தரவை SUPERSEDE செய்கிறது மட்டுமல்ல உடனடியாக அமுலுக்கு வருகிறது .
1.அஞ்சல் எழுத்தர்கள் /மற்றும் SPM களுக்கு TENURE என்பது மூன்று ஆண்டுகள் (POST TENURE )
2.இடமாறுதல்கள் Human Recourse அடிப்படையிலும் சிக்கன நடவடிக்கை அடிப்படையிலும் ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ப அமைந்திடல் வேண்டும் 
3. TENURE முடிக்கின்ற ஊழியர்களிடம் குறைந்தபட்சம் 3 இடங்களை விருப்பமாக பெற்றிடவேண்டும் 
4..கூடுமானவரை ஊழியர்களை SAME STATION யில் பணியாற்றிட வாய்ப்புகள் வழங்கிடவேண்டும் 
5.கூடுமானவரை INTER STATION மாறுதலை கட்டுப்படுத்தவேண்டும் (செலவினங்களை கருத்தில் கொண்டு )
6. குறைந்தபட்ச இரண்டு ஆண்டு இடைவெளியில் தான் பழைய இடங்களில் பணி மாறுதல் கொடுக்க வேண்டும் .
7.C&B SPM களுக்கு மீண்டும் அதே இடத்தில பணியாற்றிட அனுமதி கிடையாது .இதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்கள் விருப்ப இடங்களை கொடுக்க வேண்டும் 
8.C&B SPM தவிர இதர எழுத்தர்கள் ஓய்வு பெற ஓராண்டுக்குள் இருந்தால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டியதில்லை 
9.கணவன் மனைவி இவர்களை ஒரே ஸ்டேஷன் யில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் 
10.உடல் ஊனம் உள்ள ஊழியர்களின் விருப்பங்கள் /மாற்று திறனாளிகளை பராமரிக்கும் பெற்றோர்கள் இவர்களை கவனத்தில் கொண்டு இடமாறுதல்களை அமைத்திட வேண்டும் 
11.சுழல் மாறுதல்கள் உத்தரவு பிறப்பித்த  45 நாட்களுக்குள் அமுல்படுத்திடவேண்டும் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை 

Tuesday, January 22, 2019

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் --இது பழமொழி மட்டுமல்ல உண்மையும் கூட ..
              தபால் காரர் தோழர்களுக்கு ஒரு நற்செய்தி 
தபால்காரர்கள் மற்றும் MTS தோழர்கள்  அஞ்சல் எழுத்தர் பணிக்கு  கணனி திரன் அறிவு  தேர்வு  தேவையில்லாத ஒன்று .இதனை ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை  நமது மாநிலச்செயலாளர் தோழர் க.கண்ணன் அவர்கள் AIPEU NFPE General Secretary Com மொகந்தி அவர்களிடம் முன்வைத்தார்  .இதனை ஏற்று நமது மத்திய சங்கத்தின் முயற்சியால்   இன்று  நமது அஞ்சல் இலாகா கணனி திரன் அறிவு  தேர்வு ரத்து என உத்தரவு பிறப்பிக்பட்டுள்ளது  .ஆகவே நடந்து முடிந்த APTITUDE தேர்வின் அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கணணி திறனை அவர்கள்   பயிற்சிக்கு செல்லும் பயிற்சிமையங்களில் கற்றுக்கொள்வார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது .நமது மாநிலசெயலர் தோழர் கண்ணன் அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
          

அன்பார்ந்த தோழர்களே !
Cash Handling Allowance and Treasury Allowance have been subsumed என்ற அடிப்படையில் அனைத்து காசாளர்கள் மற்றும் C & B அலுவலக SPM அனைவருக்கும் இந்த அலவன்ஸ் சராசரி 5 லட்சம் வரை மாதம் 700 என்றும் 5 லட்சத்திற்கு மேல் மாதம் 1000 வழங்கவேண்டும் என்ற உத்தரவை  18.01.2019 அன்று DOPT   F. No. 4/6/2017-Estt.(Pay-II) Government of India Ministry of Personnel, Public Grievances & Pensions Department of Personnel & Training  பிறப்பித்துள்ளது .விரைவில் அஞ்சல் வாரியமும் இதற்கான தனி உத்தரவை பிறப்பிக்கும்  இத்துடன் .இதற்கான FORMAT வேண்டுபவர்கள் இத்துடன் இனைக்கப்பட்டுள்ள படிவத்தை பயன்படுத்திக்கொள்ளவும் .
நன்றி .SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !
 ..நமது கோட்டத்தில் இருக்கும் இடங்களை விட பதவி உயர்வு பெறுவோர் அதிகம் அணல்  நமது பக்கத்து கோட்டமான தூத்துக்குடியில் பதவி உயர்வு பெறுபவர்களைவிட LSG  பதவிகள் அதிகம் .நேற்று தூத்துக்குடி கோட்ட தலைவர் அண்ணன் சங்கரநாராயணன் அவர்கள் தெரிவித்த கருத்து இதோ ! தூத்துக்குடி கோட்டத்தில் எவையெல்லாம் தூரமாக கருதப்படுகிறதோ அவையெல்லாம் திருநெல்வேலியை ஒட்டிக்கொண்டிருக்கும் பகுதிகள் .ஆகவே பதவி உயர்வை மறுக்க நினைக்கும் நெல்லை தோழர்கள் கீழ்கண்ட பகுதிகளை தேர்வு செய்வது நல்லது என்று தெரிவித்தார்கள் .
1.நாரைக்கிணறு 2.ஒட்டநத்தம் .3.கருங்குளம் .4.தாதன்குளம் .
இருந்தாலும் பல்வேறு சூழ்நிலைகளுக்காக பதவி உயர்வை மறுக்க நினைக்கும் ஊழியர்களுக்கான ஒரு மாதிரி படிவம் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 






Monday, January 21, 2019

                                                வருந்துகிறோம் 
நெல்லை GDS சங்கத்தின் முன்னணி தோழர் M .அப்துல்சமது GDS பேக்கர் திருநெல்வேலி HO அவர்களின் அன்பு தாயார் திருமதி .ஹைருனிஷா (75 ) அவர்கள் 20.01.2019 இரவு  10.30 மணியளவில் இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 21.01.2019 திங்கள் மாலை 4 மணிக்கு மேலப்பாளையத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு நெல்லை NFPE சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                                     NELLAI NFPE 

                                            முக்கிய செய்திகள்
ஏழாவது சம்பளக்குழு பரிந்துரையின் படி Cash Handling Allowance and Treasury Allowance have been subsumed என்ற அடிப்படையில் அனைத்து காசாளர்கள் மற்றும் C & B அலுவலக SPM அனைவருக்கும் இந்த அலவன்ஸ் சராசரி 5 லட்சம் வரை மாதம் 700 என்றும் 5 லட்சத்திற்கு மேல் மாதம் 1000 வழங்கவேண்டும் என்றும் நாம் மாதாந்திர பேட்டியில் விவாதித்தும் அதற்கு நமது இலாகா அதற்கான தனி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்ற பதிலையும் கோட்ட நிர்வாகத்தால் பெற்றிருந்தோம் .அதற்கு ஒரு முன்னேற்றம் கிடைத்துள்ளது .மத்திய அமைச்சரவையின் முடிவை ஏற்று 18.01.2019 அன்று DOPT   F. No. 4/6/2017-Estt.(Pay-II) Government of India Ministry of Personnel, Public Grievances & Pensions Department of Personnel & Training அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த உத்தரவை உறுதிசெய்துள்ளது .விரைவில் அஞ்சல் வாரியமும் இதற்கான தனி உத்தரவை பிறப்பிக்கும் .இதற்கான FORMAT வேண்டுபவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் .இந்த உத்தரவு 01.07.2017 முதல் அமுலாகிறது .
------------------------------------------------------------------------------------------------------------
                                                        LSG பதவி உ(து ) யர்வா ?
எந்தவித FIXATION பயனில்லை .சூப்பர்வைசர் என்றொரு தனி அடையாளம் இல்லை .விரும்பிய இடத்தில் பணியாற்றிடும் வாய்ப்பு இல்லை .தொலைதூர பணியிடங்கள் அதிலும் அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்புடன் அலுவலகங்கள் பல அலுவலகங்களில் நெட் வசதிகள் கிடைக்க சிரமங்கள் இத்தனையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் ஏன் பதவி உயர்விற்கு செல்லவேண்டும் என்ற நமது தோழர்களின் கருத்துக்கள் கோபங்கள் நியாயமானதே ! FINANCIAL UPGRADATION யை நெருங்குகிற ஊழியர்கள் தவிர அதாவது 28 -29 வருடத்தை  தொட்டு கொண்டிருக்கும் ஊழியர்களை தவிர ஏனைய தோழர்கள் அடுத்த ஆண்டுவரை பதவி உயர்வை தள்ளிபோடுவதில் வேறு சிக்கல்கள் இல்லை .இருந்தாலும் சில தலைவர்கள் சொல்லுவதை போல் கேடர் சீரமைப்பு சாதனையா ? வேதனையா ? அல்லது சோதனையா ?என்பதனை நேரடியாக எதிர்கொள்பவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும் .பதவி உயர்வை DECLINE செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு இன்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கும் நிலைக்கு நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதும் ஒரு கசப்பான உண்மையே ! இருந்தாலும் DECLINE செய்தால் அதன்பிறகு வரும் உள்ளூர் சோதனைகளை (DEPUTATION ) சந்திக்கநேரிடுமோ என்ற அச்சத்தை விடுத்து பணியாற்றுங்கள் என்ற உறுதியை மட்டும் கோட்ட சங்கம் 
தெரிவித்து கொள்கிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

தபால் மருத்துவமனைகள் CGHS உடன் இனைப்பு --அஞ்சல் வாரியம் உத்தரவு நேற்று பிறப்பித்துள்ளது .
MERGER OF 33 POSTAL DISPENSARIES WITH CGHS-REG : DoP ORDER
No.2-3/2009-Medical
Government of India
Ministry of Communications
Department of Posts
Dak Bhavan, Sansad Marg,
New Delhi – 110 001
Dated: 2 January, 2019

To
All Chief Postmasters General/Postmasters General

Sub:- Merger of 33 postal dispensaries with CGHS-reg.

Sir/Madam,

I am directed to forward herewith a copy of Order No. S.11011/01/2016/CGHS-III/EHS dated 21st December, 2018 of the Ministry of Health & Family Welfare on the subject mentioned above for further necessary action at your end.

Yours faithfully
(M.S. Zou)
Assistant Director General (Medical)

*****
No. S.11011/01/2016/CGHS-III/EHS
Government of India
Ministry of Health & Family Welfare
Department of Health & Family Welfare
Nirman Bhawan, New Delhi – 110 108
Dated: the 21st December, 2018


ORDER

Subject: Merger of 33 Postal Dispensaries with CGHS – Reg.

In pursuance of the decision taken by the Government on recommendations of the 7th Central Pay Commission, the following 33 (thirty three) postal dispensaries presently functioning in 33 Cities i.e. Agra, Ajmer, Aligarh, Ambala, Amritsar, Bareilly, Behrampur, Chhapra, Cuttack, Darbhanga, Dhanbad, Dibrugarh, Gaya, Gorakhpur, Guntur, Jalandhar, Jalpaiguri, Jodhpur, Kota, Morababad, Muzaffarpur, Nellore, Raipur, Rajahmundry, Saharanpur, Silchar, Siliguri, Tiruncleveli, Tiruchirappalli, Vadodra, Varanasi, Vijaywada and Visakhapatnam are here by merged with the CGHS

2. All serving employees and pensioners of Department of Post (DoP) and Department of Telecom (DoT), who are residing/settled in above 33 cities and are beneficiaries of the 33 Postal Dispensaries, shall now be covered under CGHS and the Postal Dispensaries shall be rechristened as CGHS Wellness Centres.

3. In so far as the existing facilities and manpower in position in these 33 Dispensaries are concerned, the merger shall be effective as per the following terms and conditions:-

a) All Serving employees and pensioners of Department of Post (DoP) and Department of Telecom (DoT) shall have to abide by the CGHS rules and guidelines to become a member of the Scheme. They shall have to pay the requisite contribution as per the prevailing rates prescribed by the Ministry of Health and Family Welfare/CGHS DoP & DoT will take necessary action to inform their employees and pensioners in this regard.

b) All existing facilities and infrastructure like buildings, furniture and fixtures equipment’s etc. will be taken over by CGHS on ‘as is where is’ basis. The Department of Post shall handover the possession of the Postal Dispensaries accommodation to the Department of Health and Family Welfare/CGHS at a token rent of Re.1/- per annum. In case of rented accommodations, CGHS will pay the rent from the date of taking over of the Dispensaries.

c) All doctors of GDMO sub-cadre of CGHS working in the above 33 Dispensaries will be taken on roll of CGHS and they shall be placed under the administrative control of Department of Health and Family Welfare/CGHS for all purposes.

d) All employees (technical/non-technical staff) along with the work allocated and posts they are currently holding in these 33 Dispensaries shall be taken over by CGHS. Their seniority and other condition of service in CGHS shall be governed by the relevant instructions and guidelines issued by DoPT from time to time.

e) All expenditure relating to these Dispensaries including medicines, hospitalization and other reimbursable expenses (of pensioners), salaries and other allowances to the Postal dispensary employees as a result of merger of these dispensaries shall be borne by CGHS from its own resources.

f) Local Committees shall be constituted in the respective cities with representatives from with representatives from both CGHS and Postal Dispensaries to resolve all staffing and other local issues arising on account of the merger in consultation with nodal Ministries.

4. These Orders shall be effective from 1st January, 2019. Additional Director of concerned CGHS City shall initiate action for taking over of Postal Dispensaries in consultation with the concerned Postal Authorities.

5. This issues with the concurrence of Ministry of Finance, Department of Expenditure’s ID No. 18(4)/E. V/2017, dated 26.11.2018.

(Rajeev Attri)
Under Secretary to the Govt. of India
(Tel: 011 – 2306 1883)

 

Friday, January 18, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 வணக்கம் .நேற்று 17.01.2019 அன்று நடைபெற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம் .முதன்முதலாக தோழியர்கள் இருவர் ஹைருனிஷா பேகம் (P 3) தங்கலக்ஷ்மி (P 4) ஆகியோர் ஆர்வத்தோடு பங்கேற்றதும் விவாதித்தும் உள்ளபடியே பாராட்டவேண்டிய அம்சமாக இருந்தது .
1.LSG TR பதவிகள் TS TREASURE ஆக மாறியதால் தற்போது காசாளராக  பணியாற்றும் அனைத்து LSG TR களுக்கும் மாற்று இடம் (LSG ) கொடுக்க விருப்பமனுக்கள் பெறப்பட்டு நிரப்பப்படும் .
2.நமது கோட்டத்தில் உள்ள LSG காலியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் .
3.கேடர் சீரமைப்பு உத்தரவு படி நமது கோட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட LSG முதல் குறைக்கப்பட்ட எழுத்தர் பதவிகள் வரையிலான ESTABLISHMENT திருத்தங்கள் விரைந்து செய்யப்பட்டு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் அனுப்பப்படும் .
4.LSG பதவிகளில் SPM ஆக பணியாற்றும் TS PA (GP 2400 ) களுக்கு OFFICIATING PAY (GP 2800) வழங்கப்படும் .ஆகவே கோட்ட அலுவலகத்தால் பணியமர்த்தப்பட்ட TS PA கள் OFFICIATING PAY கேட்டு விண்ணப்பிக்கலாம் .
5.டெபுடேஷன் பொறுத்தவரையில் ஒரு இடத்தில் டெபுடேஷன் முடிந்தால் மீண்டும் தலைமை இடத்தில் JOIN பண்ணிய பிறகே அடுத்த TURN படி அவரை அனுப்பவும் டெபுடேஷன் யில் இருக்கும்போதே அடுத்த இடத்திற்கு அனுப்ப கூடாது என்பது ஏற்றுக்கொள்ள பட்டது .டெபுடேஷன் உத்தரவை பார்த்துவிட்டு விடுப்பு வழங்கும் போஸ்ட்மாஸ்டர் குறித்தும் SSP அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .
6.பாளையம்கோட்டையில் ஆறாவது SB கவுண்டர் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது .
7.திருநெல்வேலி HO வில் அனைத்து பிரிவுகளுக்கும் அந்தந்த ஊழியர்களை கலந்து ஆலோசித்து பாரபட்சமற்ற புதிய MDW தயார்படுத்த உத்தரவு வெளியிடப்படும் .
8.MACP பதவி உயர்வுகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் மண்டல அலுவலகம் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் பதில் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் 2018 முதல் பெறவேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
9. RULE 38 இடமாறுதலில் வருகிற ஊழியர்களுக்கு ஏற்கனவே நாம் கேட்டபடி திசையன்விளை வடக்கன்குளம் வள்ளியூர் நாங்குநேரி மற்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள காலியிடங்களுக்கு இடமாறுதல் அளித்திட ஒப்புக்கொள்ளப்பட்டது .
10.DEPUTAION விஷயத்தில் MACP II என்ற வரையறை பதவி உயர்வில் வந்த தபால்காரர்களுக்கு GP 4200 என்பதை பார்க்காமல் MACP II என்ற அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என்றும் விருப்பப்படுகிறவர்கள் டெபுடேஷன் செல்லலாம் என்பது குறித்தும் விரைந்து INSTRUCTIONS வழங்கப்படும் .
11.பாளையம்கோட்டையில் தோழியர்களுக்கான டைனிங் /ரெஸ்ட் ரூம் மாற்றியமைக்கவும் ஆண்களுக்கான டைனிங் அறை மீண்டும் பழைய கேன்டீன் இருந்த இடத்திற்கு மாற்றும் வகையில் சீர்செய்யப்படும் .
12.கங்கைகொண்டான் அலுவலகத்திற்கு CASHOFFICE சங்கர்நகர் என்ற உத்தரவு மறுபரிசீலிக்கப்பட்டு மாற்றப்படும் .
13.தேவையான டவுண் SO களுக்கு AUTHORIZED BALANCE  மாற்றி அமைக்கப்படும் .
14.பாட்டரி பிரட்ச்சினைகளில் மண்டல அலுவலத்தில் ஏற்படும் காலதாமதத்தை சுட்டிக்காட்டி இதனால் பாதிக்கப்பட்டுள்ள பாளையம்கோட்டை திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி போன்ற பெரிய அலுவலகங்களுக்கு LOCAL PURCHASE அடிப்படையில் பாட்ட ரிகள்  வாங்க மண்டல அலுவகத்தில் அனுமதி வாங்கவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
15.வேலைப்பளுவை கணக்கில் கொண்டு மஹாராஜநாகர் அலுவலகத்திற்கு மேலும் ஒரு PA இணைக்கப்பட பரிசீலிக்கப்படும் .
16.தபால்காரர்களுக்கு 3050 நிர்ணயம் குறித்து மீண்டும் தலைமைஅஞ்சலகங்களுக்கு தாக்கீது அனுப்படும் .
17.மாவட்ட ஆட்சியாளர் பிறப்பித்த குறைந்தபட்ச கூலி ரூபாய் 320 என்ற அறிவிப்பு அனைத்து அலுவலகங்களுக்கும் மீண்டும் அனுப்பிவைக்கப்படும் .
18.தோழர் வெண்ணிக்குமார் அவர்களின் NPS வித்ட்ராயில் 13.12.2018 அன்று ஆடிட் அலுவகத்திற்கு அனுப்பட்டுள்ளது .SSP அவர்களே சீனியர் AO அவர்களை தொடர்புகொண்டு அவன செய்வதாகவும் தெரிவித்தார்கள் 
   மேலும் முழுவிபரங்கள் மினிட்ஸ் COPY வந்தவுடன் தெரிவிக்கப்படும் .
             நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, January 16, 2019

         இன்று பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர் தினம் 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு . . !!!
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று  உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் சுவையைப் போல், தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித்துள்ளார் வள்ளுவர். ஆனால் குறளில் எங்குமே தமிழ் என்ற வார்த்தையோ தனி ஒரு கடவுளை பற்றியோ மதத்தை பற்றியோ குறிப்பிட்டது இல்லை  அதனால் தான்  இந்த நூலை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு அருமையான தகுதியாகும்..உலகில் விவிலியத்திற்கு அடுத்தபடியாக அதிக புழக்கத்தில் உள்ள நூல் திருக்குறள் என்பது மேலும் ஒரு சிறப்பு 
வாழ்த்துக்களுடன் நெல்லை NFPE 


Monday, January 14, 2019

        அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                      உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .இந்த மாதம் நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிகவிருக்கும் பிரச்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .மிக ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் கோட்ட சங்கத்தை அணுகும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                     TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 11.01.2019

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
            Sub:    Subjects for monthly meeting -reg
                                                *****
              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.
1.        Request to replace the batteries of all UPS systems available for the back office of Palayankottai HO as they are exhausted long back.
2.        Request to replace the batteries of UPS in which the Server of Tirunelveli HO has been connected.
3.        Request to allot a room for female staff for recreation/rest room purpose as the existing room is being utilised for BPC.  Further, majority of the staff are ladies and required amenities may please be done.
4.        Request grant/issue of MACP orders to the eligible officials for the period from Janavary 2018
5.        Request preparation of MDW for the general branch and SB branch of Tirunelveli HO with due consultation with the officials working in a fair manner.
6.        Request to fill up the vacant HSG-I posts on temporary basis by calling for volunteers.
7.        Request to fill  up the vacant PA posts in the following offices by posting the official coming under Rule-38 transfer considering the unbearable work load of the office.
(a)Tisayanvilai (b)Panagudi (C)Vadakkangulam(d) Nanguneri (e)Kalakad
8.      It is requsted to provide hands on deputation for atleast 10 days each for every month to clear the pending works
(a)Mundradaippu  (b) Burkitmanagaram (c) TerkuKarungulam
9.      Request to set right the faulty pass book printer of Tirunelveli HO.

10.    After RD Decentralisation, an additional hand was provided to Maharaja Nagar.  It is requested to permanently provide one PA to Maharaja Nagar SO to cope up the heavy work load.
11.    It is requested to carry out civil patch works in the dining room being used for the male staff [old canteen building].
12.    It is requested to exempt the promotive PAs from deputation considering their age, knowledge etc., considering them as MACP II.
13.    It is requested to instruct the Postmasters to depute officials to next offices only after re-joining the HQ Office.  It is seen that same official is being deputed from the place he/she is on deputation.
                           14.Request supply of UPS batteries to Ambasamudram H.O. during    
                                    power   failure it is very difficult to run the office.
                          15..Request early replacement of batteries attached with the UPS of  
                            Cheranmahadevi S.O which has no backup.

                16..Request  to supply an Additional passbook printer to                  
                          Cheranmahadevi
                 17.Request to set right NSP1connectivity problem at Suttamally
                 18.Request to restore the 6th SB counter at Palayamkottai HO
              19. It is requested to draw officiating pay (Rs. 2800) to the officials who are drawing erstwhile grade pay of Rs.2400 when deputed to Class B and Class C Offices as SPM.
      20. It is requested to update the establishment register taking into account the upgraded LSG, HSG-II and HSG-I posts after cadre restructuring.
         21.  Request to re-examine the order issued by fixing Sankar Nagar SO as cash office for Gangainkondan SO.
                 
                      The following officials will attend the meeting.
        1     S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Tirunelveli HO
             2.      Smt.  M.Hairunisha begam PA Palayamkottai
             3.         Sri. P.Subramaniam PA Ambasamudram


             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]