...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 21, 2019

                                            முக்கிய செய்திகள்
ஏழாவது சம்பளக்குழு பரிந்துரையின் படி Cash Handling Allowance and Treasury Allowance have been subsumed என்ற அடிப்படையில் அனைத்து காசாளர்கள் மற்றும் C & B அலுவலக SPM அனைவருக்கும் இந்த அலவன்ஸ் சராசரி 5 லட்சம் வரை மாதம் 700 என்றும் 5 லட்சத்திற்கு மேல் மாதம் 1000 வழங்கவேண்டும் என்றும் நாம் மாதாந்திர பேட்டியில் விவாதித்தும் அதற்கு நமது இலாகா அதற்கான தனி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்ற பதிலையும் கோட்ட நிர்வாகத்தால் பெற்றிருந்தோம் .அதற்கு ஒரு முன்னேற்றம் கிடைத்துள்ளது .மத்திய அமைச்சரவையின் முடிவை ஏற்று 18.01.2019 அன்று DOPT   F. No. 4/6/2017-Estt.(Pay-II) Government of India Ministry of Personnel, Public Grievances & Pensions Department of Personnel & Training அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த உத்தரவை உறுதிசெய்துள்ளது .விரைவில் அஞ்சல் வாரியமும் இதற்கான தனி உத்தரவை பிறப்பிக்கும் .இதற்கான FORMAT வேண்டுபவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் .இந்த உத்தரவு 01.07.2017 முதல் அமுலாகிறது .
------------------------------------------------------------------------------------------------------------
                                                        LSG பதவி உ(து ) யர்வா ?
எந்தவித FIXATION பயனில்லை .சூப்பர்வைசர் என்றொரு தனி அடையாளம் இல்லை .விரும்பிய இடத்தில் பணியாற்றிடும் வாய்ப்பு இல்லை .தொலைதூர பணியிடங்கள் அதிலும் அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்புடன் அலுவலகங்கள் பல அலுவலகங்களில் நெட் வசதிகள் கிடைக்க சிரமங்கள் இத்தனையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் ஏன் பதவி உயர்விற்கு செல்லவேண்டும் என்ற நமது தோழர்களின் கருத்துக்கள் கோபங்கள் நியாயமானதே ! FINANCIAL UPGRADATION யை நெருங்குகிற ஊழியர்கள் தவிர அதாவது 28 -29 வருடத்தை  தொட்டு கொண்டிருக்கும் ஊழியர்களை தவிர ஏனைய தோழர்கள் அடுத்த ஆண்டுவரை பதவி உயர்வை தள்ளிபோடுவதில் வேறு சிக்கல்கள் இல்லை .இருந்தாலும் சில தலைவர்கள் சொல்லுவதை போல் கேடர் சீரமைப்பு சாதனையா ? வேதனையா ? அல்லது சோதனையா ?என்பதனை நேரடியாக எதிர்கொள்பவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும் .பதவி உயர்வை DECLINE செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு இன்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கும் நிலைக்கு நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதும் ஒரு கசப்பான உண்மையே ! இருந்தாலும் DECLINE செய்தால் அதன்பிறகு வரும் உள்ளூர் சோதனைகளை (DEPUTATION ) சந்திக்கநேரிடுமோ என்ற அச்சத்தை விடுத்து பணியாற்றுங்கள் என்ற உறுதியை மட்டும் கோட்ட சங்கம் 
தெரிவித்து கொள்கிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment