...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 25, 2019

அன்பார்ந்த தோழர்களே !
  இறுதியாக cash handling allowance  குறித்து அஞ்சல் வாரியம் 22.01.2019 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது .இது குறித்து நாம் ஏற்கனவே நவம்பர் மாத மாதாந்திரபெட்டியிலேயே  விவாதித்திருந்தோம் .
3.As per the recommendation of the 7th CPC, Treasury allowance was subsumed with ‘Cash handling allowance’ vide Dte F No. 4/6/2017-Estt (Pa-II) and hence it is requested to draw cash handling allowance to all SPMs of B & C Class offices and Treasurers under Tirunelveli Division w.e.f 01.07.2017.
ஆகவே தோழர்கள்  இதற்கான  statistics யை அனுப்பி 01.07.2017 முதலான பணபயன்களை  பெறுமாறு மீண்டும் நினைவு படுத்துகிறோம் .இதற்கான  மாதிரி  படிவத்தினை  பெற விரும்புகிறவர்கள்  நமது முன்னணி தோழர்  இயற்கை ஆர்வலர் கோபால்   PA ஏர்வாடி (8072056140) அவர்களை  தொடர்பு கொள்ளவும் . 
  வெல்லட்டும் அரசு ஊழியர்கள் -ஆசிரியர் போராட்டம் 

 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25ஆம் தேதிக்குள் (வெள்ளிக் கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் புதனன்று (ஜன. 23) உத்தரவிட்டது. .இது குறித்த பத்திரிக்கை செய்தி 

எங்களுடைய 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையிலும் நாங்கள் அறிவித்த காலவரையற்ற போராட்டம் தொடரும். வெள்ளிக்கிழமை திட்டமிட்டப்படி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். வருகிற 26ஆம் தேதி நடைபெறும் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழுவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். 28ஆம் தேதி முதல் போராட்டத்தின் வடிவம் மேலும் தீவிரப்படுத்தப்படும்.எனவே தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றம் எங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. எங்களுடைய சங்கத்தில் இணைந்திருக்கின்ற ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை தொடரும். எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க நிதி இருக்கிறது. அரசை நல்ல முறையில் வழிநடத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுக்க நிதி இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
எங்களை வீதிக்கு போராட கொண்டு வந்தது அரசுதான். போராட்டத்தை தொடரவேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் இல்லை. ஜாக்டோ- ஜியோ தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வருகிற 28ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. அதனை பொறுத்து எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களுடைய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments:

Post a Comment