...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 18, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 வணக்கம் .நேற்று 17.01.2019 அன்று நடைபெற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம் .முதன்முதலாக தோழியர்கள் இருவர் ஹைருனிஷா பேகம் (P 3) தங்கலக்ஷ்மி (P 4) ஆகியோர் ஆர்வத்தோடு பங்கேற்றதும் விவாதித்தும் உள்ளபடியே பாராட்டவேண்டிய அம்சமாக இருந்தது .
1.LSG TR பதவிகள் TS TREASURE ஆக மாறியதால் தற்போது காசாளராக  பணியாற்றும் அனைத்து LSG TR களுக்கும் மாற்று இடம் (LSG ) கொடுக்க விருப்பமனுக்கள் பெறப்பட்டு நிரப்பப்படும் .
2.நமது கோட்டத்தில் உள்ள LSG காலியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் .
3.கேடர் சீரமைப்பு உத்தரவு படி நமது கோட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட LSG முதல் குறைக்கப்பட்ட எழுத்தர் பதவிகள் வரையிலான ESTABLISHMENT திருத்தங்கள் விரைந்து செய்யப்பட்டு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் அனுப்பப்படும் .
4.LSG பதவிகளில் SPM ஆக பணியாற்றும் TS PA (GP 2400 ) களுக்கு OFFICIATING PAY (GP 2800) வழங்கப்படும் .ஆகவே கோட்ட அலுவலகத்தால் பணியமர்த்தப்பட்ட TS PA கள் OFFICIATING PAY கேட்டு விண்ணப்பிக்கலாம் .
5.டெபுடேஷன் பொறுத்தவரையில் ஒரு இடத்தில் டெபுடேஷன் முடிந்தால் மீண்டும் தலைமை இடத்தில் JOIN பண்ணிய பிறகே அடுத்த TURN படி அவரை அனுப்பவும் டெபுடேஷன் யில் இருக்கும்போதே அடுத்த இடத்திற்கு அனுப்ப கூடாது என்பது ஏற்றுக்கொள்ள பட்டது .டெபுடேஷன் உத்தரவை பார்த்துவிட்டு விடுப்பு வழங்கும் போஸ்ட்மாஸ்டர் குறித்தும் SSP அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .
6.பாளையம்கோட்டையில் ஆறாவது SB கவுண்டர் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது .
7.திருநெல்வேலி HO வில் அனைத்து பிரிவுகளுக்கும் அந்தந்த ஊழியர்களை கலந்து ஆலோசித்து பாரபட்சமற்ற புதிய MDW தயார்படுத்த உத்தரவு வெளியிடப்படும் .
8.MACP பதவி உயர்வுகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் மண்டல அலுவலகம் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் பதில் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் 2018 முதல் பெறவேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
9. RULE 38 இடமாறுதலில் வருகிற ஊழியர்களுக்கு ஏற்கனவே நாம் கேட்டபடி திசையன்விளை வடக்கன்குளம் வள்ளியூர் நாங்குநேரி மற்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள காலியிடங்களுக்கு இடமாறுதல் அளித்திட ஒப்புக்கொள்ளப்பட்டது .
10.DEPUTAION விஷயத்தில் MACP II என்ற வரையறை பதவி உயர்வில் வந்த தபால்காரர்களுக்கு GP 4200 என்பதை பார்க்காமல் MACP II என்ற அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என்றும் விருப்பப்படுகிறவர்கள் டெபுடேஷன் செல்லலாம் என்பது குறித்தும் விரைந்து INSTRUCTIONS வழங்கப்படும் .
11.பாளையம்கோட்டையில் தோழியர்களுக்கான டைனிங் /ரெஸ்ட் ரூம் மாற்றியமைக்கவும் ஆண்களுக்கான டைனிங் அறை மீண்டும் பழைய கேன்டீன் இருந்த இடத்திற்கு மாற்றும் வகையில் சீர்செய்யப்படும் .
12.கங்கைகொண்டான் அலுவலகத்திற்கு CASHOFFICE சங்கர்நகர் என்ற உத்தரவு மறுபரிசீலிக்கப்பட்டு மாற்றப்படும் .
13.தேவையான டவுண் SO களுக்கு AUTHORIZED BALANCE  மாற்றி அமைக்கப்படும் .
14.பாட்டரி பிரட்ச்சினைகளில் மண்டல அலுவலத்தில் ஏற்படும் காலதாமதத்தை சுட்டிக்காட்டி இதனால் பாதிக்கப்பட்டுள்ள பாளையம்கோட்டை திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி போன்ற பெரிய அலுவலகங்களுக்கு LOCAL PURCHASE அடிப்படையில் பாட்ட ரிகள்  வாங்க மண்டல அலுவகத்தில் அனுமதி வாங்கவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
15.வேலைப்பளுவை கணக்கில் கொண்டு மஹாராஜநாகர் அலுவலகத்திற்கு மேலும் ஒரு PA இணைக்கப்பட பரிசீலிக்கப்படும் .
16.தபால்காரர்களுக்கு 3050 நிர்ணயம் குறித்து மீண்டும் தலைமைஅஞ்சலகங்களுக்கு தாக்கீது அனுப்படும் .
17.மாவட்ட ஆட்சியாளர் பிறப்பித்த குறைந்தபட்ச கூலி ரூபாய் 320 என்ற அறிவிப்பு அனைத்து அலுவலகங்களுக்கும் மீண்டும் அனுப்பிவைக்கப்படும் .
18.தோழர் வெண்ணிக்குமார் அவர்களின் NPS வித்ட்ராயில் 13.12.2018 அன்று ஆடிட் அலுவகத்திற்கு அனுப்பட்டுள்ளது .SSP அவர்களே சீனியர் AO அவர்களை தொடர்புகொண்டு அவன செய்வதாகவும் தெரிவித்தார்கள் 
   மேலும் முழுவிபரங்கள் மினிட்ஸ் COPY வந்தவுடன் தெரிவிக்கப்படும் .
             நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

2 comments: