...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 23, 2019

அன்பார்ந்த தோழர்களே !
  குரூப் C மற்றும் குரூப் B (NON -GAZETTED ) ஊழியர்களுக்கான புதிய இடமாறுதல் வழிகாட்டுதல்களை அஞ்சல் வாரியம் 17.01.2019 அன்று வெளியிட்டுள்ளது .இது முந்தைய உத்தரவை SUPERSEDE செய்கிறது மட்டுமல்ல உடனடியாக அமுலுக்கு வருகிறது .
1.அஞ்சல் எழுத்தர்கள் /மற்றும் SPM களுக்கு TENURE என்பது மூன்று ஆண்டுகள் (POST TENURE )
2.இடமாறுதல்கள் Human Recourse அடிப்படையிலும் சிக்கன நடவடிக்கை அடிப்படையிலும் ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ப அமைந்திடல் வேண்டும் 
3. TENURE முடிக்கின்ற ஊழியர்களிடம் குறைந்தபட்சம் 3 இடங்களை விருப்பமாக பெற்றிடவேண்டும் 
4..கூடுமானவரை ஊழியர்களை SAME STATION யில் பணியாற்றிட வாய்ப்புகள் வழங்கிடவேண்டும் 
5.கூடுமானவரை INTER STATION மாறுதலை கட்டுப்படுத்தவேண்டும் (செலவினங்களை கருத்தில் கொண்டு )
6. குறைந்தபட்ச இரண்டு ஆண்டு இடைவெளியில் தான் பழைய இடங்களில் பணி மாறுதல் கொடுக்க வேண்டும் .
7.C&B SPM களுக்கு மீண்டும் அதே இடத்தில பணியாற்றிட அனுமதி கிடையாது .இதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்கள் விருப்ப இடங்களை கொடுக்க வேண்டும் 
8.C&B SPM தவிர இதர எழுத்தர்கள் ஓய்வு பெற ஓராண்டுக்குள் இருந்தால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டியதில்லை 
9.கணவன் மனைவி இவர்களை ஒரே ஸ்டேஷன் யில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் 
10.உடல் ஊனம் உள்ள ஊழியர்களின் விருப்பங்கள் /மாற்று திறனாளிகளை பராமரிக்கும் பெற்றோர்கள் இவர்களை கவனத்தில் கொண்டு இடமாறுதல்களை அமைத்திட வேண்டும் 
11.சுழல் மாறுதல்கள் உத்தரவு பிறப்பித்த  45 நாட்களுக்குள் அமுல்படுத்திடவேண்டும் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment