அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
மத்திய அரசு பணிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவை 23.01.2019 அன்று அஞ்சல் வாரியமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------
தமிழக அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லையில் ஆர்ப்பாட்டம்
நாள் --30.1.2019 இடம் -பாளையம்கோட்டை HO முன்பு
நேரம் மாலை 6. மணி
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மிக வலுவாக வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வரும் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை மிரட்டியும், அராஜக நடவடிக்கையில் இறங்கி உள்ள மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறோம் .உழைக்கும் மக்கள் எத்திசையில் போராடினாலும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்குவது நம் வர்க்க உணர்வின் வெளிப்பாடு .ஆகவே நெல்லை அஞ்சல் ஊழியர்கள் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment