...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 31, 2019

                                                        NFPE 
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -குரூப் C 
திருநெல்வேலி கோட்டம் --627002

அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில செயலர் அண்ணன் JR அவர்களுக்கு பணி நிறைவு வாழ்த்துக்கள் 

நாள் 31.01.2019              இடம் சென்னை 
                                              மாயவரம் தந்திட்ட மகத்தான  தலைவன் 
பந்தா -பகட்டு ஏதுமின்றி பணியாற்றிய தோழன் 
ஆயிரம் தான் விமர்சனங்கள் வந்தாலும் 
அத்தனையையும்  மென்று ஏப்பமிட்ட அன்பு சால் தோழன்  

மாயவரத்தில்  தொழிற்சங்க ஆரம்ப கல்வி என்றால் 

சிந்தாதரிபேட்டையில் பட்ட படிப்பை முடித்தவன் !
துறவறத்தில் எட்டாண்டுகள் கழித்திருந்தாலும்  -எளிதில்  
எவரும் எட்டாத சாதனைகளை படைத்தவன்

ஞாயிறுகளில் MPCM மற்றும் SPEEDPOST  என்ற 

அகங்கார சட்டத்தை உடைத்து காட்டியவன் 
அலுவலகமுடல் என்ற பழைய நிலை திரும்பாமல் 
அஞ்சலகங்களை  காத்து கொடுத்தவன் 

 -பயிற்சி மையத்தில் இடமில்லை என்றபோதிலும் 

எழுத்தர்களுக்கு   IN -HOUSING பயிற்சியை நடத்தி காட்டியவன் 
பண்டிகை நாட்களிலும் பயிற்சியாளர்கள் 
ஊருக்கு செல்ல கூடாது என்ற கொடுமையை 
தடுத்து நிறுத்தியவன் 

காலிப்பணியிடங்கள் இல்லை என்ற கூற்றை 

பொய்யாக்கி 2012 யில் 
 அறுநூறு  எழுத்தர் பதவிகளை எடுத்து காட்டியவன் 
RESIDUAL VACANCY மூலம் எண்ணற்ற 
ED ஊழியர்களை எழுத்தராக்கி அழகு பார்த்தவன் 

RICT என்றாலும் CSI என்றாலும் 

அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல் 
தமிழகத்தில் அனுமதிக்கமுடியாது என்று 
தடையானையை தக்கவைத்தவன் 

கேடர் சீரமைப்பு கேடு விளைவிக்கும் என்ற 
கேலி  பேச்சை பொய்யாக்கி 
கேட்பவர்களுக்கு கேட்ட இடத்தையும் 
மறுத்தவர்களுக்கு மேலும் புது 
வாய்ப்புகளையும் வாரி வழங்கியவன் 

கணக்கில் விடுபட்டதை கவனமாக கையிலெடுத்து 

பலநூறு எழுத்தர் இடங்களை பெற்று தந்தவன் 
கனவிலும் நினைக்காத இளையவர்களுக்கு -ஒரே இரவில் 
விதி 38 யில் சொந்த ஊருக்கு  அனுப்பி வைத்தவன் 

விடுபட்ட இடங்களையும் 

புள்ளி விவரங்களோடு அள்ளி வீசி 
போதிய விதிகளை -சுட்டி காட்டி 
  புதிய பதவிகளுக்கு அடித்தளத்தை விட்டு சென்றவன் 

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உன்னிடத்தில் உண்டு 

ஆழமான விவாதங்கள் அதிகம் உண்டு 
அடுக்கடுக்கான கேள்விகள் அதிலும் உண்டு 
அதிகாரிகளை அசர வைக்கும் ஆற்றலும் உனக்குண்டு 
எல்லாரும் சொல்வதைப்போல 
உன் இடத்தை நிரப்ப யார் உண்டு 

நுனி நாக்கு ஆங்கிலம் 
தனி ஆளாய் நீ காட்டிய ஆலாபனம்  
எடுத்துக்காட்டுக்கு வரலாறு 
எதெற்கெடுத்தாலும் MGR பாட்டு -என 
சலிப்பில்லாத உன் உரையாடல் -என்றும் 
புளிப்பில்லாத உன்னத கருத்துரைகள் 
இவைகளெல்லாம் உனக்கே சொந்தம் 

மாற்றான் தோட்டத்து மல்லிகை அல்ல -நீ 

மாற்று கருத்துள்ளோரையும் விரட்டி 
பி (அ )டிக்கும் எண்ணமும் உனக்கு இல்லை  
ஒருகூட்டு பறவைகள் நாம் -இங்கே 
எத்தனைபேருக்கு தெரியும் 
ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் நாம் என்று !


வாழ்த்துகிறேன் ! உளப்பூர்வமாய் போற்றுகிறேன் !

அண்ணன் பாலுவின்  அரவணைப்பில் வளர்ந்திட்ட 
உன்னை வாழ்த்துகிறேன் ! போற்றுகிறேன் !
                                            தோழமையுடன்-- SK .ஜேக்கப் ராஜ் --











0 comments:

Post a Comment