அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மத்தியஅரசு ஊழியர்களுக்கு கட்டாய /முன்கூட்டிய ஒய்வு திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்திவரும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் --
நாள் -09.09.2020 நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
அனைவரும் பங்கேற்போம் ! அநீதிக்கெதிராய் அணி திரள்வோம் !
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் FR 56 (J) &48 (H ) உத்தரவினை புதுப்புது விளக்கங்களை காட்டி ஊழியர்கள் மத்தியில் கட்டாயஓய்வு எனும் அச்சத்தை உருவாக்கிவரும் மத்திய அரசின் ஊழியர்விரோத போக்கினை மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது .புதிய மொந்தையில் பழைய கள் என்பதுபோல இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டுவருகிறது .
விதி FR 56 (J) என்ன சொல்கிறது பார்ப்போம்
This rule can be exercised by the competent authority to give compulsory retirement for
1. Group A and Group B officers who joined service before 35 years of age and has attained
50 years of age.
2. Group C and Group D officers if they had attained 55 years of age.
விதி 48(1)(b) of CCS Pension Rules, 1972 இதுதான்
All government servants who are governed by CCS Pension Rules and has completed 30 years of
service can be given compulsory retirement.
ஆக தேவையில்லாத அச்சத்தை ஊழியர்கள் மீது திருப்பி அவர்களின் போராட்ட வலிமையை குலைத்துவிட அரசு கடைபிடிக்கும் உத்தியை நாம்துணிச்சலோடு எதிர்கொள்வோம் . ஆர்பாட்டத்தில் அனைத்து தோழர்களும் தோழியர்களும் தவறாது கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் .நமது கோட்டத்தில் அஞ்சல் ஆர் .எம் .எஸ் .ஓய்வூதியர்கள் சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறது .
---------------------------------------------------------------------------------------------------------------
தமிழக அஞ்சல் நான்கு சங்கத்தின் போராட்ட அறைகூவல் --11.09.2020 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
உலகையே புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த அசாதாரண சுழலில் கூட நமது துறையில் மட்டும் தபால்காரர்களை குறிவைத்து தாக்கும் கொடூரம் தொடரத்தான் செய்கிறது .எருதின் நோய் காக்கைக்கு தெரியாது என்பதுபோல POSB IPPB ஆதார் AEPS பரிவர்த்தனை என்று டார்கெட் நிர்ணயித்து டார்ச்சர் தொடர்ந்துகொண்டிருக்கிறது .அதுமட்டுமல்ல இந்த இலக்கிற்கு வேலைப்பளுவால் சிக்கித்தவிக்கும் SPM தோழர்களும் விதிவிலக்கல்ல .யானையை எலி கேள்வி கேட்பதுபோல் இதுபோன்ற LOGIN MEGA LOGIN அன்று சில ஏவலாளர்கள் படுத்தும்படும் சொல்லிமாளாது .அதுமட்டுமல்ல இலக்கை எட்டவில்லை என்றால் APAR யில் கைவைப்பேன் உங்களுக்கு MACP கிடைக்கவிடமாட்டேன் என்று உருட்டல்கள் மிரட்டல்கள் வேறு .இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வருகிற 11.09.2020 அன்று அனைவரும் பணியிடத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் படி கேட்டுக்கொள்கிறோம் .
வெல்லட்டும் வெல்லட்டும் போராட்டங்கள் வெல்லட்டும்
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment