...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 10, 2020

அன்பிற்கினிய தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                  மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளன அறைகூவலின்படி நேற்று நமது கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது .கோட்டத்தலைவர்கள் T .அழகுமுத்து -சீனிவாசசொக்கலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் .நிகழ்வில் அஞ்சல் மூன்றின் மாநிலத்தலைவர் தோழர் செல்வகிருஷ்ணன் -ஓய்வூதியர் சங்க செயலர் சண்முகசுந்தர ராஜ் உதவி செயலர் விஜயராஜா தோழியர் ஹேனா அஞ்சல் நான்கின் மாநில அமைப்புச்செயலர் தோழர் புஷ்பாகரன் RMS பழனி சுப்ரமணியன் AIGDSU கோட்ட செயலர் ஞான பாலசிங் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் .கோட்ட உதவி தலைவர் P .சுப்பிரமணியன் நன்றி கூறினார்கள் .ஆர்பாட்டத்தில் திரளாக கலந்துகொண்ட அனைத்து தோழர்கள் ஓய்வூதியர்கள் மற்றும் நெல்லை மகிளா கமிட்டி நிர்வாகிகள் அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                        முன்னதாக நமது சங்க அலுவலகத்தில் புதிய கணினி செயல்பாட்டினை மாநில தலைவர் தோழர் .M.செல்வ கிருஷ்ணன் அவர்கள் தொடங்கிவைத்தார்கள் .மகிளா கமிட்டியின் மூத்த தோழியர் ஹைருனிசா பேகம் முதலாவதாக இயக்கிவைத்தார்கள் .இந்த நிகழ்வில் மாநில சுப்ரிம் கவுன்சிலர் வண்ணமுத்து மகிளா கமிட்டி மாநில உறுப்பினர் முத்துப்பேச்சி கவிஞர் முத்துலட்சுமி முன்னாள் மாநில உதவி தலைவர் SK .பாட்சா ஆகியோர் கலந்துகொண்டார்கள் .தோழர்கள் ரசூல் மாநில தொழிற்நுட்ப பிரிவு செயலர் தோழர் A.சுப்ரமணியன் DSM உடனிருந்து நமக்கு அனைத்து உதவிகளையும் செய்தனர் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                     நாளை 11.09.2020 அன்று IPPB AEPS நெருக்கடிகளை கண்டித்து நடைபெறும் கருப்பு பேட்ஜ் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட கேட்டுக்கொள்கிறோம் .
                                                   நேற்றைய நன்கொடையாளர்கள் 
தோழர் .M.செல்வ கிருஷ்ணன் மாநிலத்தலைவர் --ஒரு கம்ப்யூட்டர் டேபிள் 
தோழர் .M.கலிய பெருமாள் மத்திய அரசு ஓய்வூதியர் சங்க துணை தலைவர் ரூபாய் -1000
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment