...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 26, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நேற்று நமது கோட்டத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை குறித்து நமது உறுப்பினர்கள் மிகவும் தீவீரமாக விவாதித்து கொண்டார்கள் .ஒன்று LSG பதவிஉயர்வில் NOTIFY பண்ணாத இடங்களை நிரப்பியது மற்றொன்று நமது கோட்டநிர்வாகம் 24.09.2020 அன்று பிறப்பித்த டெபுடேஷன் குறித்த உத்தரவுகள் .இவை இரண்டும் குறித்து நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாட்டினை உறுதிசெய்திட இன்று மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நமது கோட்டசங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .இது செயற்குழு என்றாலும் அனைவரும் கலந்துகொள்ளவும் கலந்துகொள்ள முடியாதவர்கள் தங்கள் கருத்துக்களை நமது NELLAI NFPE வாட்ஸாப்ப் தளத்தில் பதிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம் .நேற்றைய உங்கள் கருத்துக்கள் ஆதங்கங்கள் உள்ளபடியே நமது இயக்கத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றையும் பிடிப்பையும் காட்டுகிறது .இந்த பிரச்சினையை முன்மொழிந்து இறுதிவரை விவாதத்தில் பங்கேற்ற நண்பர் வண்ணமுத்து அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

நேற்றைய மாதாந்திர பேட்டியில் கூட இந்த பிரச்சினை குறித்து சுமார் இருபது நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது .2010 க்கு முன்னால்  டெபுடேஷன் எப்படி அனுப்பப்பட்டது ஏன் இத்தனை உத்தரவுகளை கோட்ட நிர்வாகம் போஸ்ட்மாஸ்டர்களுக்கு அறிவுறுத்தி வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கினோம் .கண்காணிப்பாளர் அவர்க்ளின் பார்வையில் போஸ்ட்மாஸ்டர் என்பவர் விருப்பு வெறுப்பு இன்றி வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு காட்டாமல் நடப்பது தான் .ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஒரு பாரபட்சம் காட்டப்பட்டதால் தான் கோட்ட நிர்வாகம் இத்தனை உத்தரவுகளை பிறப்பித்தது ..உதாரணமாக 06.04.2016 உத்தரவில் LRPA பிறகு PA பிறகு MACP  I என ஊழியர்கள் டெபுடேஷன்க்கு அனுப்ப அன்று முடிவெடுக்கப்பட்டது .அதுமட்டுமல்லாமல் TURN REGISTER முறையாக பராமரிக்கப்படவும் அதை ஊழியர்கள் கேட்கும் பொழுது அவர்களின் பார்வைக்கு கொடுக்கவேண்டும் என்றும் இதை மீறுகிற தலைமை/துணை  அஞ்சலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கைக்கு பிறகு தான் டெபுடேஷன் முறைப்படுத்தப்பட்டது .அதன்பிறகு கூட தனக்கு வேண்டியர்களுக்கு TURN வந்தால் அந்த ஊழியர்களுக்கு முன்கூட்டியே தகவல்கள் கொடுக்கப்பட்டு அந்த ஊழியரை விடுப்பில் செல்ல சொல்லி அடுத்த நபரை அனுப்புவதாக வந்த குற்றசாட்டை நிருபித்தபிறகு டெபுடேஷன் உத்தரவு வந்தபிறகு யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது MACP II பெறாவிட்டாலும் 20வருடம் முடித்திருந்தால் டெபுடேஷன் இருந்து விலக்கு அளிக்கலாம் இன்றும் MACP II என்பது எழுத்தர் கேடரில் தான் என்பது என்று இவ்வளவு உத்தரவுகளை பெற்றுக்கொடுத்தபிறகும் டெபுடேஷன் அனுப்புவதில் பாரபட்சம் நீடிக்கும் பொழுது அனைத்து வழிகாட்டுதல்களையும் நீக்கிவிட்டது போஸ்ட்மாஸ்டர் நிச்சயம் நீதியை கடைபிடிப்பார் ஆகவே கோட்ட நிர்வாகத்திடம் இருந்து தனியாக உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டாம் எனவும் பழைய உத்தரவுகளை எல்லாம் நீக்குகிறேன் என்பதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என நாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம் .இதேபோல் கடந்த 24.02.2020 அன்று அன்றைய பொறுப்பு கண்காணிப்பாளர் திரு VPC அவர்களும் அனைவரும் டெபுடேஷன் குறித்து தடாலடி உத்தரவை பிறப்பித்ததும் உடனே நாம் தலையிட்டு அந்த உத்தரவை நிறுத்திவைத்ததும் உங்களுக்கு நினைவிருக்கும் .நேற்று கூட நமது SSP அவர்களிடம் நிர்வாகம் செய்கின்ற சிலவிதிமீறல்களை சுட்டிகாட்டியுள்ளோம் .அவர்களும் ஒருவாரம் பாருங்கள் இதில் கிரிவென்ஸ் வந்தால் நாம் தீர்த்துக்கொள்வோம் என்ற உறுதிமொழியோடு மாதந்திர பேட்டியில் முடிவெடுத்தோம் .இன்னொன்று நேற்றைய LSG உத்தரவுகளில் உள்ள குறைபாடுகள் .இவைகளை கலைந்திட ஊழியர்கள் மனஉளைச்சல் இன்றி பணியாற்றிட  உங்கள் பங்களிப்பை கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .நன்றி

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment