அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மீண்டும் தலைமை அஞ்சலகங்களில் தபால்காரர் பதவி குறைப்பு
கடந்த 18.02.2020 அன்று பாளையம்கோட்டையில் NDC (நோடல் பார்சல் சென்டர் ) தொடங்கப்பட்டது .அது தொடங்கப்படும் போதே இரண்டு தபால்காரர்களை NDC க்கு DIVERT செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .நாம் உடனே தலையிட்டு தமிழகத்தில் மற்ற கோட்டங்களில் உள்ளதை போல இருக்கிற தபால்காரர்களை குறைக்கமால் புதிய பணிகளுக்கு புதிய பதவிகளை உருவாக்குங்கள் என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் இரண்டு OUTSIDER ரூபாய் 320+100 என்கிற அடிப்படையில் செயல்படத்தொடங்கியது .இந்த சூழலில் நேற்று திடிரென 11.09.2020 முதல் பாளையம்கோட்டை மற்றும் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் இருந்து தலா ஒரு தபால்காரர் பதவியும் பாளையில் இருந்து ஒரு MTS பணிகளையும் NDC உடன் இணைக்க உத்தரவு வந்தது .உடனே அஞ்சல் நான்கின் கோட்டசெயலர் நமது கூடுதல் SSP அவர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அனுப்பியிருந்தார்கள் .அஞ்சல் மூன்றின் சார்பாக நானும் நமது கூடுதல் SSP அவர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு இரவு 7 மணிக்கு SSP அவர்களுடன் தொடர்புகொண்டு இந்த உத்தரவை இவ்வளவு வேகமாக அமுல்படுத்தவேண்டாம் நாம் இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம் என வலியுறுத்தினேன் ..உடனே சம்பந்தப்பட்ட ASP OD அவர்களிடமும் தொலைபேசியில் பேசியிருக்கிறன் .மாநிலம்முழுவதும் ஒருநிலை நமது கோட்டத்தில் மட்டும் ஒருநிலை எடுக்கக்கூடாது .மேலும் கொரானா காலத்தில் எந்த கணக்கெடுப்பையும் கையில்வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க கூடாது என நாம் வலியுறுத்திவரும் இந்த சூழலில் இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது .கண்காணிப்பாளர் அவர்களாக இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்பது நேற்று அவர்களிடம் நாம் பேசும் போது உணர முடிந்தது ..இதுகுறித்து அஞ்சல்நான்கின் மாநில /மண்டல செயலர்களுக்கும் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆண்டாண்டுகாலமாக பணகுடிக்கு ஒரு தபால்காரர் வேண்டும் வள்ளியூர் க்கு ஒரு பணசேர்ப்பாளர் வேண்டும் என்ற நமது கோரிக்கைகளில் நிர்வாகம் இதே வேகத்தை காட்டுமா ?
இன்று கருப்பு அட்டை இயக்கம் --11.09.2020
அஞ்சல் நான்கின் மாநில சங்க அறைகூவலின் படி இன்று நடைபெறும் கருப்பு அட்டை இயக்கத்தை வெற்றிபெற செய்வீர் ....
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment