அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
*இன்று 09.09.2020 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும் படி மீண்டும் உங்களை நினைவுபடுத்துகிறோம் .
*நமது கோட்ட சங்க அலுவலக பயன்பாட்டிற்காக புதிய கணினி (பிரிண்டருடன்) வாங்கப்பட்டுள்ளது .அதன் செயல்பாட்டினை இன்று நமது அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் மாலை 05.30 மணிக்கு அஞ்சல்மூன்றின் மாநில தலைவர் தோழர் M .செல்வகிருஷ்ணன் அவர்கள் தொடங்கிவைக்கிறார்கள் .இதற்காக முயற்சிகளை மேற்கொண்ட மாநில தொழிற்நுட்ப பிரிவு உறுப்பினர் தோழர் ரசூல் மற்றும் A .சுப்ரமணியன் DSM ஆகியோர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
*IPPB Aeps நெருக்கடிகளை கண்டித்து வருகிற 11.09.2020 அன்று அஞ்சல்நான்கு மாநிலச்சங்க அறைகூவலின் படி கருப்புபேட்ஜ் அணிந்து பணியாற்றிட கேட்டுக்கொள்கிறோம்
அதற்கான பேட்ஜ் அனைவருக்கும் இன்று அனுப்பிவைக்கப்படும் .அம்பை பகுதிகளுக்கு நாளை கிடைக்கும் வகையில் அனுப்பப்படுகிறது .அனைத்து தோழர்களும் /தோழியர்களும் 11.09.2020 கருப்பு பேட்ஜ் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்
நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment