அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
மாநில சங்கத்திற்கு குறிப்பாகமாநிலசெயலர் சகோதரர் A .வீரமணி அவர்களுக்கு நன்றி !நன்றி !
நமது கோட்ட சங்கம் கொண்டுசெல்கின்ற பிரச்சினைகளை உடனுக்குடன் மாநில /மண்டல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று பிரச்சினைகளின் தீர்வில் முழுகவனம் செலுத்தும் மாநிலசெயலருக்கு நன்றி .நன்றி .குறிப்பாக நமது மூத்த தோழர் N .கண்ணன் அவர்களின் HRA பிரச்சினை கணக்கு பிரிவு ஊழியர்களுக்கு LSG பதவிகளை நிரப்புதல் சம்பந்தமான பிரச்சினைகளில் அதிவிரைவாக செயல்பட்டமைக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
*இன்று நண்பகல் 12 மணிக்கு நமது புதிய கண்காணிப்பாளருடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .கொரானா பரவலை முன்னிட்டு அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களுக்கு தனித்தனியாகவும் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து இரண்டாகவும் குறைக்கப்பட்டுள்ளது .இருந்தாலும் மாதாந்திர பேட்டியை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்வோம் .இன்று நிர்வாக கவனத்திற்கு கொண்டு செல்லும் பிரச்சினைகள் தனியாக உங்கள் பார்வைக்கு தனியாக கொடுக்கப்பட்டுள்ளது .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment