அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நமது கோட்ட சங்கத்தின் அவசரச்செயற்குழுக்கூட்டம் 26.09.2020 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது .30 க்கும் மேற்பட்ட நமது உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .தோழர்கள் N . கண்ணன் தோழியர் முத்துபேட்சியம்மாள் மகிளா கமிட்டி கன்வீனர் வண்ணமுத்து முத்துமாலை நெல்லையப்பன் சுப்ரமணியன் புருஷோத் தமன் மாநில தலைவர் தோழர் செல்வகிருஷ்ணன் உள்ளிட்ட பல தோழர்கள் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்தனர் .செயற்குழு தொடங்கும் முன்பே நமது SSP அவர்களுடன் தொடர்புகொண்டு நமது கோட்ட செயலர் இந்த செயற்குழுவின் நிலையை குறித்து தெரிவித்தார் .நமது SSP அவர்களும் நிச்சயம் இந்த DEPUTAION பிரச்சினையில் வரும் திங்கள்கிழமை ஒரு விரிவான விளக்க ஆணை பிறப்பிக்கப்படும் என்று உறுதிகூறினார்.நமது மாநிலத்தலைவரும் SSP அவர்களிடம் இந்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்கள் .இதை நமது செயற்குழு தொடங்கும்போது முறையாக அறிவிக்கப்பட்டது .இருந்தாலும் டெபுடேஷன் விஷயத்தில் நமது கோட்டசங்கத்தின் நிலைபாடு பழைய நிலையிலேயே தொடரவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன .அதேபோல் LSG /UNFILLED HSG II பதவிகளை நிரப்பிடும்போது நிர்வாகத்தின் பாரபட்ச நிலை கண்டிக்கத்தக்கது என்றும் NOTIFY பண்ணாத பதவிகளை நிரப்பியது தவறு என்றும் APMSB திருநெல்வேலி HO வில் தோழியர் பாப்பா அவர்களின் மனு அற்ப காரணங்களுக்காக பரிசீலிக்கப்படாததை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது .பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இன்றே அப்பீல் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும் .அதன்பிறகு நமது மாநிலச்சங்கத்தின் மூலம் இந்த முறைகேடுகள் மண்டல அலுவலக கவனத்திற்கு கொண்டுசென்று நிச்சயம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்க நமது கோட்ட சங்கம் உறுதியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .இறுதியாக தோழர் S.ஆவுடைநாயகம் அவர்கள் நன்றிகூற செயற்குழு சிறப்பாக நடைபெற்றது .ஒருநாள் அவகாசத்தில் கூட்டப்பட்ட நமது செயற்குழுவில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் கருத்துக்களை மிக சுதந்திரமாக மற்றும் நம்பிக்கையோடு நம்மோடு வாட்ஸாப்ப் மூலம் பகிர்ந்து கொண்ட அனைத்து தோழியர்க்ளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment