அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பாக மத்தியஅரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெற வகைசெய்யும் FR 56 (J) &48 (H ) 28.08.2020 உத்தரவை ரத்துசெய்ய வலியுறுத்தி நாடெங்கிலும் மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்துள்ளனர் .அதனை ஏற்று நமது நெல்லை கோட்டத்தில் வருகிற 09.09.2020 அன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் .(ஆர்ப்பாட்ட நேரம் -இடம் மற்ற சங்கத்தோடு கலந்து விரைவில் அறிவிக்கப்படும் .
* பயணப்படி வழங்குவதிலும் அரசு நெருக்கடி கொடுத்துவருகிறது .மாதமொன்றிற்கு 6 சத செலவினங்களுக்கு மட்டுமே TA வழங்கவேண்டுமாம்
*இனிமேல் அரசு .அலுவலகங்களுக்கு வழங்கப்படும் காலெண்டர் டெஸ்க்டாப் டைரி உள்ளிட்டவைகளை அச்சடிக்கும் பணி நிறுத்தப்படுகிறது .டிஜிட்டல் மயமானதால் இந்த நடவடிக்கை என அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது
*POSB செக் தட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன .நமது மேல்மட்டத்தில் அதற்கான INDENT முறையாக நாசிக் அச்சத்திற்கு அனுப்பியத்தில் தாமதமாம் .இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் முகவர்கள் நலன்கருதி இலாகா வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க அதாவது SB வித்ட்ராவல் படிவத்தை பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது .
*நேற்றைய நன்கொடையாளர் திருமதி .R.ராஜகுமாரி SPM சமாதானபுரம் ரூபாய் 1000 வழங்கியுள்ளார்கள் .தோழியருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment