அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நெல்லை மகிளா கமிட்டி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி !நன்றி !
நமது கோட்ட சங்க அலுவலக பயன்பாட்டிற்காக நெல்லை மகிளா கமிட்டி சார்பாக முதற்கட்டமாக ரூபாய் 12000 நன்கொடையாக வழங்கியுள்ளார்கள் (பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது ).நன்கொடைகளை வழங்கிய அனைவருக்கும் இதை பொறுப்பேற்று நடத்திய நமது மகிளா கமிட்டி தலைவர் தோழியர் விஜயலட்சுமி கன்வீனர் தோழியர் முத்துபேட்சியம்மாள் ஆகியோருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் இதுவரை மொத்தம் 44000 ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது ..
*நமது சங்க பயன்பாட்டிற்காக ஒரு கணினி வாங்குவதற்கான பொறுப்பினை நமது மாநில தொழிற்நுட்ப பிரிவு உறுப்பினர் தோழர் ரசூல் DSM மற்றும் கொளகை பற்றாளர் தோழர் சுப்பிரமணியம் DSM அகியோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .கூடிய விரைவில் நமது அலுவலகம் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட வசதியுடன் செயல்படும்
நினைத்து பார்க்கிறேன் ...
நான் 1991 யில் கிளைசெயலாராக பொறுப்புக்கு வந்த காலத்தில் நமது உறுப்பினர சந்தா ரூபாய் 3.ஊழியர்களிடம் நேரடியாக சென்று சந்தா பிரிக்கவேண்டும் .மூன்று மாதத்திற்கொருமுறை விடுப்பு எடுத்துக்கொண்டு நண்பர்களை அழைத்துக்கொண்டு சந்தா பிரிக்கச்செல்வோம் ..அதற்குமுன்பாக மூத்த தோழர்கள் சைக்கிளில் சென்று சந்தா பிரித்திருக்கிறார்கள் .ஊழியர்களை சந்தித்து சந்தா கேட்கும்பொழுது சிலர் பார்த்தவுடன் 5 மாத சந்தாவை சேர்த்துக்கொடுப்பார்கள் .சிலர் தாங்கள் சேர்த்துவைத்திருந்த கேள்விகளை முழுமையாக கேட்டுவிட்டுத்தான் சந்தா கொடுப்பார்கள் ..அந்த கேள்விகளில் தொழிற்சங்கத்தின் மீதுள்ள பிடிப்பு இருந்ததை பார்க்கமுடிந்தது .ஆனால் இன்று சந்தா வாங்க செல்லவேண்டியதில்லை .நன்கொடை என்றால் எந்தவித
ஆட்சேபணைகள் இல்லாமல் அள்ளி அள்ளி தருகிறார்கள் .ஏனோ நிர்வாகிகளிடம் தொழிற்சங்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்க தயங்குகிறார்கள் .பணத்தை குறைவாக பெற்றுக்கொண்டு அதிகமான கேள்விகளை கேட்டு நாங்கள் பதில்சொல்லும் பழைய காலங்கள் மீண்டும் வரவேண்டும் .அதற்காகத்தான் தோழியர்களுக்காக மகிளா கமிட்டி தனியாகவும் எழுத்தர்களுக்காக தனியாக வாட்ஸாஅப் தபால்காரர் மற்றும் MTS அவர்களுக்காக ஒரு வாட்ஸாஅப் ஓய்வுபெற்ற தோழர்களுக்காக தனியாக ஒரு வாட்ஸாஅப் என பல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்துள்ளோம் ..கொடுப்பதோடு நின்றுவிடாதீர்கள் ..கேள்விகளை சந்தேகங்களை உரிமையோடு கேளுங்கள் .NELLAI NFPE என்பது ஒரு குடும்பம் என்பதனை நினைவில்கொள்வோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment