...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 17, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

   இன்று நமது கோட்டத்திற்கு புதிய SSP ஆக திரு  S.கலைச்செல்வன் அவர்கள் பொறுப்பேற்கிறார்கள் .அவர்களை நமது NELLAI NFPE சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் ..மத்திய மண்டல அலுவகத்தில் AD (MAILS)

AD (STAFF) என முக்கியபதவிகளில் அலங்கரித்தவர் .நல்ல ஒரு நேர்மையான ஊழியர் நலன் காக்கின்ற அதிகாரி -ஓய்வுக்கு குறைந்த நாட்களே இருந்தாலும் சிறப்பான சேவையை நமது கோட்டம் அவர்களிடம் எதிர்பார்க்கிறது .

                                                               முக்கிய செய்திகள் 

LSG கோட்ட ஒதுக்கீடு நேற்று மண்டல அலுவலகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளன .அதில் நமது கோட்டத்திற்கு  44 ஊழியர்களும் தூத்துக்குடி -5 கோவில்பட்டி -9 ராமநாதபுரம் -1 என 15 தோழர்கள் வெளிக்கோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.வெறும் 26 இடங்களே இருந்த நிலையில் நமது மாநிலச்சங்கத்தின் தொடர் முயற்சியினால் இன்று கூடுதலாக 18 ஊழியர்களுக்கு நமது கோட்டத்திலேயே பதவி உயர்வு கிடைத்திருப்பது நமக்கு மகிழ்ச்சியே .மாநிலசெயலருக்கு இதற்காக மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்க்கிறோம் . இந்த நிலையில் LSG பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஒரிஜினல் LSG பதவிகள் UNFILLED HSGII VACANCY மூலம் LSG பதவிகளாக தற்காலிகமாக மாற்றப்பட்ட பதவிகள் மூத்த தோழர்கள் இடமாறுதல் கேட்டிருந்தால்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் பட்சத்தில் ஏற்படும் காலியிடங்கள் இவைகளை முழுமையாக ஊழியர்களுக்கு தெரிவிக்கவும் முந்தைய காலத்தில் நடைபெற்ற இடமாறுதலுக்கான கவவுன்சிலிங் போன்று நடத்தி அதிகபட்ச LSG பதவிகளை நிரப்பிடவும் நமது கோட்ட நிர்வாகத்தை நாம் வலியுறுத்த விருக்கிறோம் .அதேபோல் DECLINE செய்வதால் எழும் காலியிடங்களில் வெளிகோட்டங்களுக்கு  ஊழியர்களுக்கு மறுஒதுக்கீடு விரைந்துவழங்கவும் மண்டல நிர்வாகத்தை மாநிலச்சங்கம் மூலம் வலியுறுத்தவோம் .இன்று மாலை புதிய SSP அவர்களை சந்திக்கவிருக்கிறோம் .

. -------------------------------------------------------------------------------------------------------------

NDC பாளையம்கோட்டை பிரிவிற்கு நிர்வாகம் விரும்பியபடியே நிரந்தர தபால்காரர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . .அதில் ஒரு ஊழியர் பெண் ஊழியர் .500 கிராம் முதல் 5 கிலோவிற்கு மேலும் பார்சல் வந்துகொண்டிருக்கிறது .சராசரியாகஇரு  தபால்காரர்கள்  100 கி.மீ .தூரம் பட்டுவாடா செய்யவேண்டியதுள்ளது பொதுவாக பதவியை டெப்லாய் பண்ணும்போது அந்த பதவி தான் மாற்றப்படுமே தவிர ஆட்கள் அல்ல .இருந்தாலும் முந்தைய அதிகாரிக்கு எந்த அடிப்படையில் கோப்புகள் அனுப்பப்பட்டது எந்த அடிப்படையில் நிர்வாகமும் பிடிவாதமாய் இருந்தது என்பது இப்பொழுது நமக்கு தேவையில்லை என்றாலும் இந்த பிரச்சினைக்கான தீர்வில் நாம் தொடர்ந்து முயற்சித்து விரைவில் நல்ல முடிவை எட்டுவோம் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .

------------------------------------------------------------------------------------------------------

நேற்றைய நன்கொடையாளர் --திருமதி E .திலகவதி LSG OA -1000

தோழியருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment