...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 15, 2020

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

இன்னும் ஓரிருநாட்களில் LSG கோட்ட ஒதுக்கீடு நமது மண்டல அலுவலகத்தால் வெளியிடப்படவுள்ளது .நமது மண்டலச்செயலர் அவர்கள் தெரிவித்த தகவல்களின்படி கடந்த வார இறுதியில் கோட்ட அளவிலான ஒதுக்கீடு முடிந்துவிட்டது .அதனடிப்படையில் நமது கோட்ட அலுவலகத்தில் இருந்து HSG II UNFILLED VACANCY களில் பணியாற்றிட விருப்பம் தெரிவித்த ஊழியர்களிடம் கடந்த 09.09.2020 அன்று இ மெயில்  மூலம் HSG II UNFILLED குறித்த நிபந்தனைகளை தெரிவித்து அதனடிப்படையில் புதிய விருப்ப விண்ணப்பங்களை கோரியுள்ளது .விருப்பமுள்ளவர்கள் விரைந்து தங்கள் கடிதத்தை அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

*பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இடமாறுதலில் வந்த ஊழியர்களுக்கு மற்றும் ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கும் பிரிவுகளை ஒதுக்குவதில் இன்னும் ஓரிருநாளில் முடிவெடுக்கப்படும் என பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் திருமதி .விக்டோரியா அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .ஒரு வெளிப்படையான சீனியாரிட்டி அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் இருக்கும் என்ற அவர்களின் நல்ல நிர்வாக முடிவிற்கு நெல்லை NFPE தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது .

* நமது கோட்டத்திற்கு புதிய SSP திரு .கலையரசன் அவர்கள் வருகிற 17.09.2020 அன்று பொறுப்பேற்கிறார்கள் .பணிஓய்வின் விளிம்பில் பதவிஉயர்வை ஏற்றுக்கொண்டு நமது கோட்டத்திற்கு வரும் SSP அவர்களை வரவேற்கிறோம் .

கடந்த சில நாட்களில் விடுப்பு வழங்குவதில் நிர்வாகம் கடைபிடித்த சில நெறிமுறைகள் ஏற்புடையதாக இல்லை -விடுப்பு கேட்டாலோ அல்லது விடுப்பை நீட்டிக்க கடிதம் அனுப்பினாலும் கோவிட் சோதனைமேற்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டினை இனியாவது நிர்வாகம் கைவிடும் என எதிர்பார்க்கிறோம் .

*நமது கோட்ட சங்க அலுவலகத்திற்கு நேற்று ஒரு பிரிண்டர் வாங்கப்பட்டுள்ளது .கடந்த நாட்களில் நன்கொடை வழங்கிய

தோழியர் S.தெய்வராணி LSG PA  கலக்ட்ரேட்  ரூபாய் 1000 தோழர் S.சுடலைமுத்து PA  கலக்ட்ரேட் ரூபாய் 1000 வழங்கியுள்ளார்கள் .அவர்களுக்கும் NELLAI NFPE சார்பாக நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment