...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 22, 2016

         RULE 38 இடமாறுதல்களும் --நமது பங்கும்  

நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின்  விடா முயற்சி காரணமாக கடந்த 15.5.2013 முதல் மூன்று ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த  விதி 38 ன் கீழான இடமாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 எழுத்தர்களுக்கு இடமாறுதல்  உத்திரவு  தற்போது அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து RJCM  கூட்டத்தில் நம்மால் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டு வந்ததும், கேடர்  சீரமைப்பு உத்திரவு காரணமாக  CPMG  அவர்கள் இதனை செய்ய இயலாது என்று பதில் அளித்ததும் உங்களுக்குத் தெரியும் . 

இதற்கான RJCM MINUTES பதிவு  ஏற்கனவே  நம் மாநிலச்  சங்க வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்தனையும் தாண்டி இன்று நாம் இந்த உத்திரவை பெற்றுள்ளோம்.  

இந்த உத்திரவை அளிக்க இறுதியாக முடிவெடுத்து கடந்த 21.9.2016 அன்று அதற்கான கூட்டத்தை கூட்டிய  நம்முடைய  CPMG, DR  . சார்லஸ் லோபோ அவர்களுக்கு நம்முடைய மாநிலச்  சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே  ,நமது கோட்டத்திற்கு 9 தோழர்கள் மறுதலாகிவருகிறார்கள் .மேலும் இரண்டாவது பட்டியலில்  2 தோழியர்கள் வருகிறார்கள் அவர்களையும் நெல்லை 
NFPE வாழ்த்தி  வரவேற்கிறது .
1. ஹரிசித்ரா  தூத்துக்குடி 
2.பார்வதி  பாண்டிச்சேரி  
                                                        வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ்  

0 comments:

Post a Comment