...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 20, 2016

        நினைவில் போற்றுவோம் 20.10.2016 தோழர் பாலு நினைவு தினம் 
அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் --அவர் நினைவை போற்றுவோம் .
அஞ்சல்தொ ழிற்சங்க வரலாற்றில் அண்ணன் பாலுவின் காலம் பொற்காலம் 
  நெல்லைக்கும் அவருக்கும் ஏன் இத்தனை நெருக்கம் 
       1992 நெல்லையில்  அன்றைய கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்திட வேண்டி NFPE --FNPO  இனைந்து 26 நாட்களுக்கு மேல் நடத்திய மருத்துவ விடுப்பு போராட்டம் .போராட்ட முடிவில் அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார் .ஆனால் மருத்துவ விடுப்பு எடுத்து விடுப்பில் சென்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய பிடித்தம் .இதை எதிர்த்து சென்னை நிர்வாக தீர்ப்பாயகத்தில் நாம் தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது .இருந்தாலும் மனம் தளராத மாநிலசெயலர் அண்ணன் பாலு அன்றைய CPMG அவர்களிடம்  வாதாடி /போராடி அனைவருக்கும் பிடிக்கப்பட்ட ஊதியத்தை பெற்று தந்தார்கள் .நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கிலும் வெற்றி பெற வைத்தவர் பாலு .(தோழர்கள் சௌந்தர பாண்டியன் அன்றைய தலைவர் ,திரவியம் அன்றைய செயலர் மற்றும் FNPO தலைவர் /செயலர் இந்த நான்குபேருக்கு மட்டும் அவர்கள் பெயரில் வழக்கு நடந்ததற்காக அவர்களுக்கு மட்டும் ஊதியம் கிடைக்க வில்லை )
பாளையம்கோட்டை நோட்டீஸ் போர்டு நீக்கம் 1992 இல் திரு .பார்த்திபன் SSP ஆக இருந்தபொழுது நாட்டுநடப்புகள் என்ற தலைப்பில் நான் எழுதிவைத்த வாசகங்களுக்காக தொழிற்சங்க நோட்டீஸ் போர்டு அகற்றப்பட்டு எனக்கு Misuse of notice borad என்ற காரணத்தை காட்டிR rule  -16 இன் கீழ்  குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்டது .அன்றைய PMGதிரு  பார்த்தசாரதி -அவர்களைசந்திக்க  என்னையும் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறுநாளே நோட்டீஸ் போர்டு மாற்றப்பட்டது .மேலும் அன்றைய தினமே திரு .பார்த்திபன் SSP அவர்களின் கூடுதல் பொறுப்பு ரத்துசெய்யப்பட்டது . 
 PMG அலுவலகம் முன்பு தர்ணா என்றால் அன்றைய தினம் மண்டல ம் முழுவதிலும் இருந்து தோழர்கள்  பெருமளவில் கலந்துகொண்டு அங்கு  எழுப்பப்படும் கோஷங்களால் பல அதிகாரிகளின் வேஷங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டன .(குறிப்பாக நாகர்கோயில் தோழர் MMS திண்டுக்கல் அண்ணன் கணேசன்  ,பிரகஸ்பதி ,ஜேக்கப் ராஜ் என எங்கள் கோஷங்களுக்கு  தனி வரவேற்பு ஊழியர்களிடமும் -தனி கவனிப்பு அதிகாரிகளிடம் இருந்து வரும்  )  குறிப்பாக அன்றைய PMG க்கு எதிராக நாம் கொடுத்த கோஷங்கள் 
 மயக்கமா ? தயக்கமா ?
சங்கர்நகர் விருந்துக்கும் -
-DISPENSARY மருந்துக்கும் மயக்கமா ?
Rule 38 இடமாறுதல்களில் இன்றைக்கு இருக்கும் இத்தனை கட்டுப்பாடுகள் அன்றைக்கு கிடையாது .Rule 38 கேட்கும் ஊழியர்களின் விண்ணப்ப கடிதங்களை கோட்டசெயலர் பெற்று மாநிலசெயலருக்கு அனுப்பிய இரண்டாம் நாளே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் நகல் அந்தந்த ஊழியர்களுக்கும்  மாநிலசங்கத்தால் அனுப்பப்படும் .பல புதிய இளைய தோழர்களுக்கு சங்கத்தின் மேல் ஒரு பிடிப்பு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம் .
BCR பதவி உயர்வு அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 1992  களில் நமது முன்னணி தோழர்கள் தொலைதூரத்திற்கு இடமாற்றங்கள் செய்யப்பட்டபோது ஒரு ஞாயிற்று கிழமை PMG அவர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுரை IQ வில் PMG அவர்களை சந்தித்து இடமாற்றங்கள் ரத்து செய்யப்பட்டது. 
கருணைஅடிப்படையிலான பணிவாய்ப்பு தாமதப்படும் போது சம்பந்தப்பட்ட ஊழியர்களை Circle Office க்கு நேரிலேயே அழைத்து சென்று சம்பந்தப்பட்ட பிரிவில் இருந்து APMG வரை அழைத்துசென்று தீர்த்து வைப்பார் .                
மொத்தத்தில் பாலு விலைமதிப்பில்லாதர் -எதிலும்   
விலை போகாதவர் பாலு -                                                      (தொடரும் )
தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
நேற்று  19.10.2016அனுப்பியவர்கள் 

தோழர் S.முத்துமாலை                                                                                500
 தோழர்  முத்துகிருஷ்ணன்  நாங்குநேரி                                               200 
  தோழர்  கோபாலகிருஷ்ணன்                                                                  200  

தோழர் P.முத்துக்குமாரசாமி   செங்கோட்டை                                     200
தோழர்  கோபாலன்  களக்காடு                                                                100
தோழர்  S.சௌந்திர பாண்டியன்  Accounts officer  (Retd) 
மற்றும் முன்னாள் கோட்ட  . தலைவர்  )                                              1000

                                              வாழ்த்துக்களுடன் 
                          SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 









0 comments:

Post a Comment