...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 15, 2016

தன் விருப்ப ஓய்வில் செல்லும் நெல்லை கோட்ட தலைவர் தோழர் A .ஆதிமூலம் அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக பிரிவு உபச்சார விழா  -                     அனைவரும் வருக !
நாள் --17.10.2016    இடம் பாளையங்கோட்டை HO நேரம் மாலை 6 மணி 

 எதிலும் நிதானம் காட்டும் 
அண்ணன் ஆதி --இதில் மட்டும் ஏனோ 
அவசரப்பட்டுவிட்டார் !
ஆருடம் முதல் அக்குபஞ்சர் வரை 
அண்டிவந்தவர்களுக்கு --இலவசமாய் உதவிகளை 
அருளிய அருட்கொடையாளர் 
ஆங்கிலம் என்றால் --தமிழைவிட 
ஆழமாக கையாண்டவர் 
அச்சுக்கு நிகரான 
அழகான கையெழுத்துக்கு சொந்தக்காரர் 
அன்பெனும் ஆயுதமெடுத்து --நம் 
அணி சேர்க்கைகைக்கு அடித்தள மிட்டவர் 
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் 
அதிகாரிகளாலும் போற்றப்பட்டவர் 
இவருக்கு எதிரியோ  --இவர் எவருக்கும் 
ஏதிரியோ இல்லாமல் இருந்து வியப்பூட்டியவர் 
விருந்தோம்பலில் இவருக்கு நிகர் இவர் மட்டும்தான் 
விழுப்புண்களை -விளம்பரப்படுதிக்கொள்ள 
விரும்பாதவர் -
அன்பானவர் --அமைதியானவர் --
அண்ணன் ஆதி --
மண நிறைவோடு வாழ --
முழு மனதோடு வாழ்த்துகிறோம் .
                                                             அன்புடன்   SKJ மற்றும் நண்பர்கள் 


0 comments:

Post a Comment