05.11.2016அன்று பணிநிறைவு பெறும் தோழர் S .சைலப்பன் GDS தொண்டர்பஜார் அவர்களுக்கு 03.11.2016அன்று நடைபெற்ற பாராட்டு விழா திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது .போஸ்ட்மாஸ்டர் திருமதி வைரமுருகு அவர்கள் தலைமை தாங்கினார்கள் .விழாவில் நமது SSP மற்றும் ASP திரு செந்தில்குமார் .NFPE கோட்டசெயலர் தோழர் SKJ ,AIGDSU கோட்ட செயலர் காலபெருமாள் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .அஞ்சல் மூன்றின் கோட்ட உதவி செயலர் தோழர் G.நெல்லையப்பன் நன்றி கூறினார்கள் .இந்த நிகழ்வில் பணிநிறைவு பெறும் GDS தோழர்களுக்கு பணிநிறைவு பெற்ற அடுத்தநாளே இனி கிராஜூட்டி வழங்கப்படும் என்ற புரட்சிகர திட்டத்தை நமது கண்காணிப்பாளர் அவர்கள் நெல்லையில் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்கள் .இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த நெல்லை ASP திரு செந்தில்குமார் அவர்களுக்கும் --இதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நமது நிர்வாகிகளுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------------------
வருந்துகிறோம்
அம்பாசமுத்திரம் AIGDSU சங்க கிளை தலைவர் தோழர் முருகன் அவர்கள் 03.11.2016 அதிகாலை இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .குடும்ப தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

0 comments:
Post a Comment