...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 2, 2016

  தங்கம் வாங்க --தபால் அலுவலகத்துக்கு வாங்க !
             தபால் ஊழியர்கள் விற்பனையாளரா ?            வாடிக்கையாளரா ?
            இன்டெர்னல் கஸ்டமர் என்ற பெயரில் ஊழியர்களை வதைக்காதீர்கள் !
 அஞ்சல் துறையின் சமீபத்திய புது வியாபாரமான தங்கபத்திர விற்பனை தனது ஆறாவது பதிப்பை அறிவித்துள்ளது .ஒவ்வொரு அலுவலகமும் தலா 2கிராம் தங்க பத்திரத்தை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அதாவது மொத்தஅலுவலகங்கள் (BO முதல் HO ) நாட்டிலுள்ள 1.55லட்ச அலுவலகங்கள் (1.55 x 2 =3.10 லட்சம்   கிராம் விற்றாக வேண்டும் .இதில் ஒன்றும் தவறு இல்லை .இதை எங்கே விற்பது ?யாருக்கு விற்பது என்பதில் தான் பிரச்சினை .இதுபோன்ற அறிவிப்புகள் வந்தவுடன் முதல் பலி கோட்ட அலுவலக ஊழியர்கள் அடுத்து தலைமைஅஞ்சலக ஊழியர்கள் என அவர்களது படையெடுப்பு   விரிந்து கொண்டு போகும் .நமது துறை செயலரின் அறிவிப்பு அஞ்சலகத்தில் தங்க பத்திரம் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது உண்மை என்றாலும் அதை Internal Customer என்ற பெயரில் ஊழியர்களிடம் கட்டாயப்படுத்தி வாங்கச்சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று .
ஒரு கிராம் ரூபாய் 2957 முதலீடு செய்து எட்டு வருடம் காத்திருக்கும் அளவிற்கு நாம் என்ன அவ்வளவு பெரிய செல்வந்தர்களா ?வசதிவாய்ப்பு இருந்தாலும் அஞ்சல் துறை விற்பனை செய்யும் எல்லா பொருட்களையும் வாங்க வேண்டுமா ? அதுமட்டுமல்ல தங்க பாத்திரம் வாங்கும் பொழுது Application எண்ணிக்கையை அதிகரிக்க சொல்லி உத்தரவு வந்துள்ளதால் 5 கிராம் வாங்க ஒருவர் வந்தால் அவரிடம் 5 விண்ணப்பங்கள் தனித்தனியாக பெற்று கொண்டு தனித்தனியாக வினியோகிக்க வேண்டுமாம் .மீண்டும் RD 10 ரூபாய் கதை தொடங்குகிறது . ஆகவே தோழர் /தோழியர்களுக்கு ஒரு அறிவிப்பு உங்களுக்கு வாங்கும் சக்தி இருந்தால் தாராளமாக வாங்குங்கள் --ஐயா சொல்லிட்டாங்க -அம்மா சொல்லிட்டாங்க என்று உங்கள் பொருளாதார தேவைகளை தாண்டி உங்களை யாரும் கட்டாய படுத்தமாட்டார்கள் --மோட்டிவேஷன் அதிகாரிகளின் கடமை --வாங்குவது அல்லது மறுப்பது உங்களது உரிமை .அன்று ED ஊழியர்களுக்கு சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்கிறோம் .கடன்வாங்கி அல்லது சம்பளம் வாங்கி அதிகாரிகள் சொன்னதற்காக RPLI போலி பாலிசி போடாதீர்கள் --இன்று உங்களுக்கும் அதைத்தான் சொல்லுகிறோம் .கடன்வாங்கி அல்லது மனஉளைச்சலுடன் போலியான வியாபாரத்திற்கு துணை போகாதீர்கள் .நேற்று இதுகுறித்து நமது SSP அவர்களிடம் காரசாரமாக விவாதித்துவிட்டு வெளியே வரும் போது SSP சொன்னார்கள் --முடிந்தால் நீங்களும் தங்க பத்திரம் ஒருகிராமாவது வாங்குங்கள் என்றார் .
  நாம் விற்பனையாளர்கள் --நமது வாடிக்கையாளர்கள் கோடி கணக்கில் வெளியே காத்துக்கொண்டிருக்கிறார் .(Wide Publicity) விரிவான விளம்பரங்கள் செய்து நம்மிடம் என்ன புதுசரக்கு வந்துள்ளது என்று வெளி காட்டுங்கள் .இன்னும் ஓசி விளம்பரத்தை நம்பிமட்டும் இருக்காமல் வாங்குகிற கமிஷனில் கொஞ்சம் விளம்பரம் செய்து பாருங்கள் --தபால் அலுவலகத்தில் தபால் கார்டுகளை விட தங்க பத்திரங்களை அதிகமாக விற்க நம்மால் முடியும் .
வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 

0 comments:

Post a Comment