...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 15, 2016

 முன்கை எடுக்க வேண்டியவர்களே பின்கை கட்டிக்கொண்டு   இருக்கலாமா ? 
இயக்க ரீதியா கா ஊழியர்களை முடுக்க வேண்டியவர்களே முடங்கி கிடக்கலாமா ?
பணியிட அடிப்படை தெரியாமல் ஸ்டேட்மென்ட் என்ற பெயரால் ஊழியர்களை வதம் செய்யும் நிர்வாகம் --தேவையில்லாத  ஸ்டேட்மென்ட்யாருக்கு என்ன லாபம் ?
தொலைக்காட்சிகளில் பார்ப்பதுண்டு --11மணி செய்திகள் 12 மணி செய்திகள் என்று ! தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் போது முதல்சுற்று --இரண்டாம் சற்று எண்ணுவதுண்டு  .ஆனால் மணிக்குஒருமுறை அஞ்சலக TRANSACTION குறித்து தகவல்களை பெற்று என்ன செய்ய போகிறார்கள் ?
 இதுவரை வந்த டெபாசிட் எத்தனை ? கொடுத்த வித்ட்ராவல் எத்தனை ?எவ்வளவு ? அதில் ரூபாய் 500 எத்தனை ?1000 எத்தனை ?என 11மணிக்கு கோட்ட அலுவலக தொ(ல்லை) பேசியில் இருந்து இம்சைகள் ஆரம்பிக்கின்றன ? மாலை 6 மணிக்கு அடுத்த ஸ்டேட்மென்ட்? மறுநாள் காலை மொத்த ஸ்டேட்மென்ட்? அலுவலக ஊழியர்கள் பொதுமக்களுக்கு பதில் சொல்வதா ? இதுபோன்ற நிர்வாக உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் பதில் சொல்வதா ? இதில் வேறு தொ(ல்லை) பேசியில் அர்ச்சனை மற்றும் அரட்டல்கள் ?ஒரு அதிகாரி கேட்டாராம் டெபாசிட் எவ்வளவு ?வித்ட்ராவல்எவ்வளவு ?என்று சொல்ல ஒருநிமிட வேலைதானே என்கிறாராம் ?( இன்னொருவரோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எங்களால் முடியும் என்கிறாராம் .
 நாடே நம் சேவையை பாராட்டுகிறது .ஆனால் இந்த குட்டி ஜமீன்களோ பாராட்ட வேண்டாம் எங்கள் பாடுகளை குறித்து கவலை படவும் வேண்டாமா ? எங்கள் மேல் ஆத்திரப்படாமல் இருந்தால் போதும் .
                         நிர்வாக கோளாறுக்கு யார் காரணம் "?
    DIRECTORATE முதல் உத்தரவு 13.11.2016 அன்று பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக அஞ்சலகங்கள் திறக்கப்பட வேண்டும் என்கிறது .பிறகு SB TRANSACTIONS எல்லாம் வாங்கலாம் என்கிறது .அடுத்து DAILY ACCOUNT எடுக்க வேண்டும் என்கிறது .5 மணிக்கு SUBA/CS TREASURY கிடையாது என்கிறது .13.11.2016 6 மணிக்கு  14.11.2016 அன்றும் அலுவலகம் வழக்கம் போல் இயங்கும் என்கிறது ? இதில் வழக்கம் போல் என்றால் எந்த வழக்கத்தை சொல்லுவது ?
                                       மாநிலச்சங்கத்தின் மௌனம் 
 விடுமுறை நாட்களில் பணியாற்ற சொல்லும் நிர்வாக முடிவுக்கு நாங்கள் எதிராளிகள் அல்ல ? பிரதமரே கள்ள நோட்டுகளை தடைசெய்யவே 500,1000 நோட்டுகள் தடைசெய்யப்படுகின்றன என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னும் அஞ்சலகங்கள் அனைத்திலும் கள்ளநோட்டுகளை கண்டறியும் கருவியை பெற்று கொடுத்திருக்க வேண்டாமா ? வங்கிகளில் பணியாற்றுவோருக்கு நாளொன்றுக்கு 3000 வரை ரொக்கப்பணமாக கொடுக்கும் போது அஞ்சல் ஊழியர்களை பற்றி சங்கங்கள் கவலை பட்டதுண்டா ?தேவையில்லாத கேள்விக்கணைகளை ஸ்டேட்மெண்ட என்ற பெயரில் வதைக்கும் நிர்வாக முடிவுக்கு எதிராக எங்காவது குரல் கொடுத்ததுண்டா ? கடிதம் எழுதினால் மட்டும் போதுமா ?இதுவரை மாநிலச்சங்கம் எழுதிய கடிதங்கள் எத்தனை ?நிர்வாகம் கொடுத்த பதில் தான் எத்தனை ? எந்த பொது பிரச்சினையாவது தீர்க்கப்பட்டதுண்டா ? 
உப்பு சப்புகளுக்கெல்லாம் மாநில சங்கம் முன்கை எடுப்பதாக தனக்குத்தானே புகழுரைக்கும் மாநில சங்கம் ஓட்டுமொத்த ஊழியர்கள் அவதிப்படும் இந்த பிரச்சினையில் மட்டும் பின்கையையும் சேர்த்து கட்டி கொண்டு நிற்பதேன் ?
 மாநில /மத்திய சங்கங்களே !அஞ்சலக ஊழியர்களின் அன்றாட பிரச்சினைகளுக்காக உங்கள் கவனங்களை திருப்புங்கள் ? எங்களையும் கொஞ்சம் பாருங்கள் .சமகால பணியில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்குத்தான் எங்கள் கஷ்டங்கள் தெரியும் !புரியும் .மாநில செயற்குழுவில் நல்லதொரு போராட்ட முடிவிற்க்காக காத்திருக்கிறோம்.
 மாநிலசெயலர் அவர்களே ! தடைகளை தாண்டி தி.நகரை  தாண்டி வெளீயே வாருங்கள் -FOREIGN சர்விஸ் பெற்று கொண்டு முழுநேர தொழிற்சங்க பணியாற்றிட வாருங்கள் .
                         தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment