...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 3, 2016

Officiating பார்க்கும் GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் புதிய சம்பளம் வழங்க ஏன் தாமதம் ?
GDS ஊழியர்கள் தபால்காரர் /MTS காலிப்பாணியிடங்களில்  வேலைபார்ப்பதால்தான் ஓரளவு ஆள்பற்றாக்குறை என்பது ஒரு பிரச்சினையாக இல்லாமல் பெரிய நகரங்கள் முதல் சிற்றூர்   வரை தபால் சேவைகள் தாமதமின்றி நடைபெற்றுவருகின்றன .அப்படி OFFICIATING பார்க்கும் ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியத்தினை வழங்குவதில் ஏனோ அதிகாரிகளின் மனம் முன்வருவதில்லை .திருநெல்வேலி RMS இல் புதிய சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது .மத்திய மண்டலத்திலும் ,மேற்கு மண்டலத்திலும் வழங்கப்பட்டுவிட்டது .தென்மண்டலத்தில் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை..இதுகுறித்து 23.112016 அன்று நடைபெறும் CPMG அவர்களுடனான நான்குமாதாந்திர பேட்டியில் விவாதகிக்கப்படுகிறது .உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதில் ஏன் இத்தனை தாமதங்கள் --இத்தனை தயக்கங்கள் ?.
                        இது கொடுமையிலும் கொடுமை 
காசுவல் ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியம் இன்றுவரை கிடைக்கவில்லை .இதுகுறித்து அஞ்சல் வாரியம் உத்தரவு பிறப்பித்தும் கூட PMG பலரது விளக்கங்களை காரணமாக வைத்து இந்தகோரிக்கை அப்படியே கிடக்கிறது. அடித்தட்டு ஊழியர்களின் பொருளாதார நிலையினை பார்த்தாவது அஞ்சல் வாரியம் இரக்கம் வைக்காதா ? உறக்கம் கலையாதா ? .
       ' தொழிலார்கள் பிச்சைக்காரர்கள் அல்ல -தோழர்களே நீங்கள் ஒன்றாக இணைந்து அரசுக்கு உங்கள் பலத்தை சரியான முறையில் உணர்த்தாவிட்டால் உங்களின் மனுக்களும் ,அப்பீல்களும் , பெட்டிசென்களும் எதையும் சாதிக்க போவதில்லை எனவே  உணருங்கள் !ஒன்றுபடுங்கள் !போராடுங்கள்' என்ற மாபெரும் தலைவனின் முழக்கங்களை மறவாதீர் !
                      கொள்கைகளில் சமரசம் செய்யாதீர்கள் -உழைப்பை 
                     சுரண்டுபவர்களுக்கு சாமரம் வீசாதீர்கள் 
                     தோழமையுடன்  SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment