...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, July 23, 2018

                                                  முக்கிய செய்திகள் 
01.01.2004 முதல் புதிய பென்ஷன் அமுலான போதிலும் அதில் இருந்து தங்களை விடுவித்து பழைய ஓய்வூதியத்தில் தொடரவே அனைத்து துறை ஊழியர்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள் .அதற்கிடையில் பல்வேறு வழக்குகளும் NPS குறித்து நடந்து கொண்டிருக்கின்றன .இதற்கிடையில் மத்திய ரிசர்வ் போலீசில்  SI தேர்விற்கு 2002 காலியிடங்களுக்கு தேர்வு 2003 யில் நடந்து 2004 யில் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடந்த ஆண்டு /எந்த ஆண்டிற்கான பணியிடம் என்பதை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு பழைய பென்ஷன் தான் பொருந்தும்என்று தீர்ப்பளிக்கப்பட்டது  இந்த  தீர்ப்பை சுட்டிக்காட்டி இன்று BCF மற்றும் பாரா மிலிட்டரி ஊழியர்களும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உன்னத தீர்ப்பை பெற்றுள்ளனர் .நமது துறையிலும் YEAR OF VACANCY தான் அடிப்படை என பல நூற்று கணக்கான ஊழியர்கள் வழக்கை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் .
                                                மதுரையில் CSI அமுலாகுமா ?
CSI அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்த பின்னரே அந்த கோட்டத்தில் CSI அமுல்படுத்த வேண்டும்  என்ற இலாகாவின் உறுதிமொழியை மீறி பல கோட்டங்களில் CSI அமுலாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே ! இதே பணியில் மதுரையில் 24.07.2018 முதல் CSI அமுலாக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின்பும் கோட்ட சங்க கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு CSI அமுலாக்கத்தை அமுல்படுத்த மதுரை கோட்ட நிர்வாகம் முனைந்தது .எப்போதுமே மதுரை கோட்டம் புதுமையாக சிந்திக்கும் திறன் படைத்த கோட்டம் .அடிப்படைக்கட்டமைப்புகள் அனைத்தையும் கொடுத்தபின்னரே CSI அமுல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மதுரை கோட்ட சங்கம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .இந்த பின்னணியில் மதுரை மண்டல நிர்வாகம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை -அவசரஅவர்சமாக கொண்டுவரப்பட்ட புதிய கணினிகள்  என சென்றுகொண்டிருக்கிறது .இன்று இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .இதற்கிடையில் நிர்வாகம் எதுவும் தெரியாதது போல் ஏனைய கோட்டங்களில் இருந்து DSM களை மதுரைக்கு அனுப்பித்து வருகிறது .
                             நீதி கேட்டு போராடுவது மதுரைக்கு ஒன்றும் புதிதல்ல !
இந்த முயற்சியும் வெற்றி பெற நெல்லை கோட்டம் வாழ்த்துகிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

1 comment:

  1. Have a nice day.Wish to get victory about CSI implement case
    Madurai Division union.
    New pension scheme case NFPE join All India central government employees federation and file case for all central government staff including postal staff.
    NFPE JINDHABAD WORKERS UNITY JINDHABAD.
    K.PONNURAJ EX EDDA/MC
    SANKARNAGAR.
    23/07/2018

    ReplyDelete