அன்பார்ந்த தோழர்களே !
நமது மாநில சங்க நிர்வாகிகள் டெல்லி பேரணியை முடித்துவிட்டு 06.09.2018 அன்று அஞ்சல் மூன்றாம் பிரிவில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளை நமது சம்மேளன பொதுச்செயலருடன் நமது அஞ்சல் வாரியத்திடம் எடுத்து விவாதிக்க சென்றதையும் அங்கு சந்தித்து பேசிய விஷயங்களையும் நமது மாநில செயலர் அவர்கள் பதிவிட்டிருந்தார்கள் .கிட்டத்தட்ட 28 கடிதங்களை கொடுத்து விவாதித்திருக்கீறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் .ஆனால் அதில் பெரும்பகுதி நமது மத்திய செயற்குழுவில் (26.02.2018 மற்றும் 27.02..2018 ) விவாதித்து 20 அம்ச கோரிக்கைகளாக வடித்தெடுத்து அவைகளை வலியுறுத்தி நாம் மூன்று கட்ட இயக்கங்களை(12.03.2018-13.03.2018)உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 20.03.2018-21.03.2018 கருப்பு பேட்ஜ் அணிதல் இறுதியாக 25.042018 அன்று CPMG அலுவலகம் முன்பு தர்ணா என்று தொடர் இயக்கங்களை நடத்திய பிறகும் நமது கோரிக்கைகள் அப்படியே கிடப்பது தான் வருத்தமளிக்கிறது .ஆகவே இந்த அரசுக்கு நமது மனுக்கள் எந்த அளவிற்கு மாற்றத்தை கொடுக்க போகிறது என்பது நமக்கு தெரிந்ததே ! நமது ஒப்பற்ற தலைவர் 09.10.1921 லாகூரில் ஆற்றிய தலைமை உரை தான் நினைவுக்கு வருகிறது "Take it from me Brothers that petitions and memorials and supplications will count for nothing so long as you do not organise yourselves in a manner to convince the Government that will no longer stand nonsence ...........
நமது கோரிக்கைகளுக்காக தனித்த போராட்டத்தை ஊழியர்கள் எதிர்பார்கிறார்கள் .05.09.2018 பேரணி கூட ஊடகங்களில் வேறு விதமாகத்தான் சித்தரிக்கப்பட்டது .பொது வேலைநிறுத்தங்களோடு நின்று விடாமல் நமது அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை மட்டும் முன்னிறுத்தி போராட்டங்கள் நடைபெறவேண்டும் .எப்படி ஒன்றுபட்ட GDS போராட்டம் அரசையும் -அஞ்சல் வாரியத்தையும் அசைத்து கொடுத்ததும் நாம் கண்கூடாக பார்த்ததுதான் .நிச்சயம் நமது பகுதி கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தங்களை அறிவியுங்கள் .வேலைநிறுத்தமும் வெல்லும் -கோரிக்கைகளும் வெல்லும்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment