...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 18, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                மாமதுரையில் நள்ளிரவு வரை ஊழியர்கள் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் -காவல்துறை விரைந்தது -SSP மதுரை மாலையிலே தலைமறைவு 
PMG அவர்களின் உத்தரவைக்கூட செயல்படுத்த மறுக்கும் SSP மதுரைக்கெதிரான போராட்டங்கள் வெல்லட்டும் !வெல்லட்டும் !
  பலமாதங்களாக தொடந்து கடிதங்கள் -மெமோரண்டங்கள் -சந்திப்புகள் என ஊழியர் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மதுரை அஞ்சல் மூன்று சங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போனதின் விளைவாக நேற்று 17.09.2018 அன்று கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க நிர்வாகிகள் சென்றால் அதற்கு முன்பாகவே மாலை 04.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு SSP அவர்கள் வெளியேறுகிறார் .SSP வரும்வரை காத்திருக்க முடிவெடுத்த நிர்வாகிகள் கோட்ட அலுவலகத்திலே தங்கியிருக்க SSP அவர்கள் வேண்டுமென்றே தலைமறைவாகிறார் .இந்த அதிகார ஆணவமிக்க போக்கை கண்டித்து மதுரை கோட்ட ஊழியர்களால் பொறுமையின் எல்லை கடந்து முற்றுகை போராட்டமாக மாறுகிறது .நிர்வாகம் வழக்கம்போல் காவல்துறையை வரவழைக்கிறது -கோட்ட அலுவலக ஊழியர்களிடம் NFPE நிர்வாகிகள் மீது புகார் கொடுக்க வற்புறுத்துகிறது -ASP களை விட்டு காவல் துறையிடம் புகார் அளிக்க வற்புறுத்துகிறது .ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் எங்கள் தோழர்கள் முன் செல்லாக்காசாகிவிட்டது .இரவு 12 மணிவரை நீடித்த முற்றுகை போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் நம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க முடிவெடுத்துள்ளது .களம் கானும் தோழர் தோழியர்களுக்கும் தோழர் சுந்தர மூர்த்தி (முன்னாள் மாநில செயலர் )தோழர் கிருஷ்ணமூர்த்தி கோட்டசெயலர் மதுரை அவர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
1968 வேலைநிறுத்த பொன்விழா நினைவுநாளை கொண்டாடும் இந்நேரத்தில் பழைய அடக்குமுறை -பழிவாங்கல் -கோரிக்கைகள் நிராகரிப்பு போன்ற சர்வாதிகாரம் இன்னும் மதுரை போன்ற கோட்ட அதிகாரிகளால் அரங்கேறுவது குறித்து வெட்கமும் வேதனையும் வருகிறது . நீதி கேட்டு போராடுவது மதுரைக்கு ஒன்றும் புதிதல்ல 
நீதி தடுமாறியவரின் நிலையினை அதிகாரிகள் உணர வேண்டும் .
                                   தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 





0 comments:

Post a Comment