...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 24, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
        25.09.2018 நடைபெறும் GDS மத்திய JCA சார்பாக நடைபெறும் உண்ணாவிரதம் வெல்லட்டும்
                மே 2018 திங்களில் தொடங்கி 16 நாட்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திய GDS மத்தியசங்கங்கள் --வேலைநிறுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அமைச்சரவை கூடி கோரிக்கைகையை ஏற்றுக்கொண்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட புரட்சிகரமான பெருமை எங்கள் அருமை GDS ஊழியர்களுக்கு உண்டு .ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உன்னத தத்துவத்தை உண்மையிலே ருசித்து பார்த்த GDS மத்திய சங்கங்கள் இன்று வரை GDS-  JCA என்ற பெயரில் உறுதியுடன் போராட்ட அறிவிப்புகளை அறிவித்துவருவது பாராட்டுதலுக்குரியது .
 இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளுக்கு ஏற்ப இந்த GDS சங்கங்கள் வைக்கின்ற கோரிக்கைகள் நிச்சயம் வெற்றிபெறும் .விடுபட்ட கோரிக்கைகளை நாம் விட்டுவிட்டு செல்லமுடியாது .
 இடமாறுதலில் கோட்ட அதிகாரிகளே முடிவெடுக்கும் அதிகாரம் -தன்விருப்ப ஓய்வு -விடுப்பை சேர்த்துவைக்க வாய்ப்பு -01.01.2016 முதல் ஓய்வுபெற்றவர்களுக்கும் உயர்த்தப்பட்ட பணிக்கொடைகள் -குழந்தைகள் கல்விபயில அல வன்ஸ் -பணிக்கொடைகளை ரூபாய் 5 லட்சமாக உயர்த்துதல் -பதவி உயர்வுகள் என அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டி பரிந்துரைத்த சிபாரிசுகளை இந்த அரசும் அஞ்சல் துறையும் தானாகவே முன்வந்து செய்திருக்க வேண்டும் .
கமிட்டி அறிவிப்பிற்கு பிறகு மாநிலம் மாநிலமாக சென்று ஊழியர் சந்திப்பின் போது  மாண்புமிகு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கொடுத்த வாக்குறுதி இதன் அடிப்படையிலாவது விடுபட்ட கோரிக்கைகளை அரசு பரீசீலித்திருக்க வேண்டும் .ஆனால் வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேறாததால் இன்று GDS மத்திய சங்கங்கள் மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளன .இந்த  இயக்கங்களில் நாம் முழுவதும் பங்கேற்போம் .களம் கானும் GDS தோழர்களுக்கு எங்களின் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                                 உண்ணாவிரதம் 
நாள் 25.09.2018 இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
கூட்டு தலைமை தோழர் SK .ஐயப்பன் AIGDSU --C .ராஜ்குமார் NFPE -GDS
                                                    அரசாங்கத்தின் கொடூர 
                                                    தாக்குதலுக்கு முன்னால்  
                                                    நம்மிடம் உள்ள 
                                                   ஒற்றுமை எனும் -கயிற்றை 
                                                    இறுக பற்றி கொள்வோம் .
                                                    பதவியோ -பட்டமோ 
                                                    பகட்டோ -பரிகாசமோ 
                                                     எங்களை ஒன்றும் செய்திட முடியாது -
                                                    உரக்க சொல்லுவோம்
                                                    உறுதியுடன் இறுதிவரை தொடரும் 
                                                    நாங்கள் சகாக்கள் 
                                                     நாங்கள் சகோதரர்கள் 
                                                    நாங்கள் தோழர்கள் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment