...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 19, 2018

                         1968 வேலைநிறுத்த பொன்விழா -
-நாள் 19.09.2018 இடம் பாளையம்கோட்டை HO நேரம் மாலை 6 மணி 
வாருங்கள் போராட்ட வீரர்களை வாழ்த்துவோம் 
 அன்பார்ந்த தோழர்களே !
            1968 செப்டம்பர் 19 யில் நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தம் குறித்தும் அதன் மீது அரசு நடந்துகொண்ட மூர்கத்தனத்தை குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் .அன்றைய ஒன்றுபட்ட திருநெல்வேலி கோட்டத்தில் (கோவில்பட்டி கன்னியாகுமரி நெல்லை ) இந்த வேலைநிறுத்தத்தில் நெல்லை கோட்டத்திலே பங்குபெற்ற ஒரே ஒரு தோழர் மாவீரன் துராபலி என்ற தோழர் மட்டும் தான் என்றிருந்தாலும் 1968 வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பல தோழர்களை நம் கோட்டம் பிறகு பெற்றது .ஆம் பல்வேறு கோட்டங்களில் பணியாற்றி நெல்லைக்கு வந்த தோழர்கள் இன்றும் நம்முடன் இருகிறார்கள் .அவர்களால் நமது கோட்டத்திற்கு பெருமை .அவர்களைத்தான் இன்று நமது நெல்லை P3 P4 சங்கங்களின் சார்பாக பாராட்டி மகிழப்போகிறோம் .
1.தோழர் SN .சுப்பையா -இவர் திருநெல்வேலி RMS யில் பணிபுரிந்து R3 சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் .இன்று திருநெல்வேலி மத்தியஅரசு ஊழியர்கள் பென்ஷனர் சங்க மாவட்ட செயலராக ஒரு இளைஞரை போல் வலம் வருபவர் .மதிமுக கட்சியில் மாவட்ட அவைத்தலைவராக இருப்பவர் .திரு .வைகோ அவர்களை நாம் நமது கோரிக்கைகளுக்காக (150 PA களை மீண்டும் பணியில் சேர்க்கவும் -ED ஊழியர்கள் சம்பந்தமாக )சந்திக்க பலமுறை உதவி புரிந்தவர் .
2.தோழர் C .அருணகிரி -நமது கோட்ட சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் .1968 வேலைநிறுத்ததின் போது மதுரையில் பணிபுரிந்தவர் .அதற்காக இரு INCREMENT இரண்டு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் ஆறுமாதமாக குறைக்கப்பட்ட விருதினை பெற்றவர் .
.தோழர் மந்திரமூர்த்தி மற்றும் தோழர் வேலாயுதம் அவர்களும் வேலைநிறுத்த காலத்தில் பிற கோட்டங்களில் பணியாற்றினாலும் பிற்காலத்தில் நமது கோட்டத்தில் பங்கேற்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்கள் .அதே போல் ரயில்வே மற்றும் தொலைதொடர்பு துறையில் பணியாற்றி வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்களையும் நாம் வாழ்த்துகிறோம் -வணங்குகிறோம் .
 1968 வேலைநிறுத்த போராட்டம் குறித்து பிரதமர் துணை பிரதமர் உள்துறை அமைச்சர்கள் என நாட்டின் முக்கிய அமைச்சர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய பெருமை அன்றைய நமது NFPTE தலைமைக்கு உண்டு .பாராளுமன்றத்தில் பலமாக விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது .அங்கீகாரம் பறிக்கப்பட்டது ஓராண்டுக்கு பிறகு ஏனைய சங்கங்களுக்குஅங்கீகாரம் மீண்டும் வழங்கப்பட்டது .NFPTE க்கு மட்டும் வழங்கப்படவில்லை  .அதை எதிர்த்து தோழர்கள் D.ஞானையா மற்றும் தோழர் OP குப்தா போன்ற தலைவர்கள் 8 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் (19.09.1969) மேற்கொண்டு ராணுவபலமிக்க அன்றைய அரசாங்கத்தை நம் பக்கம் திருப்ப வைத்தனர் .புதுபுது சங்கங்களுக்கு (FNPO)  அரசால் தானாகவே அங்கீகாரம் வழங்கப்பட்டது .கொள்கைரீதியான இரு பிரிவுகள் சங்கத்தில் இருந்தாலும் அவைகள் இயக்க செயல்பாட்டை ஊனமாக்கவில்லை -முடக்கவில்லை ஆரோக்கியமான ஜனநாயகத்தில் நமது இயக்கம் பூத்து குலுங்கிய பழைய நாட்களை நினைத்து பார்க்கிறோம் .JCM அமைப்பை ஏற்கவா வேண்டாமா என்றபோது உறுதியாக ஏற்று அதில் பங்கேற்று அரசாங்கத்துடன் முதன்முறையாக DIS-AGREEMENT என துணிச்சலான பதிவினை பதிந்ததுடன் அதன் பின் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் JCM முடிவினை சுட்டிக்காட்டி பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்ததும் பொற்கால தலைவர்களின் மகத்தான முடிவுகள் .இந்த வரலாறு நமது இயக்கத்திற்கு மட்டும் தான் உண்டு .இதோ 1969 அன்றைய பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களை சந்தித்து பேசும் நமது தலைவர்கள் .இந்த மகத்தான தலைவர்களை பெற்ற நமது சம்மேளனத்தின் புகழை மென்மேலும் உயர்த்தி பிடிப்போம் .வாழ்க போராளிகள் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

0 comments:

Post a Comment