...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 18, 2018

                                              நெல்லை கோட்ட செய்திகள் 
கடந்த 06.09.2018 மாதாந்திர பேட்டிக்கு பிறகு நமது கண்காணிப்பாளர் அவர்களை நேற்று சந்தித்து சில விஷயங்களை விசாரித்தோம் -விவாதித்தோம்  .குறிப்பாக சமீபகாலமாக அதிகரித்திருக்கும் டெபுடேஷன் விஷயத்தில் நேற்றே நமது SSP அவர்கள் நமது கோரிக்கையின் அடிப்படையில் வழிகாட்டுதல் உத்தரவை பிறப்பித்துவிட்டதாக கூறினார்கள் .மேலும் IPPB பணிகளில் பாளையம்கோட்டையில் தபால்காரர் தோழர்களை இலாகா வழிகாட்டுதலுக்கு மாறாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் சுட்டி காட்டினோம் .ATR பதவிக்கான விருப்பமனுக்கள் விரைவில் கோரப்படும் என்றும் LSG காலியிடங்களில் விருப்பமுள்ள ஊழியர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .மிக நல்லதொரு POSITIVE  அணுகுமுறையை நேற்றைய சந்திப்பிலும் உணர முடிந்தது 
                           1968 வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு நாளை 19.09.2018 பாளையில் நடைபெறும் கூட்டத்திற்கு தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment