...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 6, 2018

                                         அம்மாவை வாழ்த்துகிறோம் 



சாராதா எனும் சந்தன மனமே 
சர்வ வல்லமை தங்களுக்கிருந்தும் 
சாதாரண ஊழியர்களையும் 
சமமாக பார்த்தவரே-பதவியை கொண்டு 
சாம்ராஜ்யம் நடத்தாமல் 
சமாதானத்தை பிறப்பித்தவர் 
சங்கடங்களை மறந்து -தென் மண்டலத்தில் 
சகஜ நிலைக்கு மாற்றியவர் 
சாஸ்தாங்கமாய் விழுந்துகிடந்த கோட்டங்களை 
சரிவில் இருந்து உயர்த்தியவர் 
அம்மா என்றும் அன்னை என்றும் -உங்களை 
அழைத்ததில்  அர்த்தம் இருந்தது
 அடிமட்ட ஊழியர்களும் 
அடிபட்ட அதிகாரிகளும் 
ஆனந்த கூத்தாடியது -உங்கள் 
ஆட்சியில் தானே 
இடமாறுதல் விஷயங்களில் 
தட்டி கழித்ததில்லை உங்கள் 
தாராள குணத்தை பார்த்திருக்கிறோம் 
எத்தனை எளிமை 
எவ்வளவு பொறுமை 
எங்கள் நலன்களையும் வளங்களையும் 
அண்டை மாநிலங்கள் அபகரித்தது உண்மைதான் 
அம்மா நீங்கள் கேரளாவிற்கு 
இடம் பெயர்ந்ததில்  இருந்து புரிந்துகொண்டோம் 
 மீண்டும் ஒருமுறையாவது 
தமிழக தலைமை அதிகாரியாக வரவேண்டும் 
நீங்கள் விட்டு சென்ற பணிதனை 
தமிழகம் முழுவதும் பரவ வேண்டும் .
        அன்புடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

0 comments:

Post a Comment