...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 5, 2018

                                                  முக்கிய செய்திகள் 
மத்திய அரசு ஊழியர்களுக்கான LTC வசதி வெளிநாடுகளுக்கு செல்லவும் விஸ்தரிக்க வரைவு திட்டம் தயார் 
 தென் ஆசியா நாடுகளிடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் சார்க் அமைப்புகளின்முமுடிவிற்கிணங்க   நேபாளம்  -பூடான்- மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சுற்றுலா சென்றுவர மத்தியஅரசு ஊழியர்களுக்கு LTC வசதியை விரிவுபடுத்த விமானபோக்குவரது அமைச்சகம் ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளது .இதில் பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் சேர்க்கப்படவில்லை .அரசு ஒருவேளை அனுமதி அளிக்கும் பட்சத்தில் ஊழியர்கள் அரசு சலுகையில் வெளிநாடு பறக்கலாம் .
                                  GDS கமிட்டி இன்றைய நிலை 
GDS கமிட்டிக்கு நிதியமைச்சக ஒப்புதலுக்கு பிறகு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படவேண்டிய குறிப்புகள் அமைச்சக செயலருக்கு அஞ்சல் வாரியத்தால் விரைவில் 
அனுப்பப்பட விருக்கிறது .ஆர்வ கோளாறு காரணமாக தேவை இல்லாத தவறான செய்திகளை நமது தோழர்கள் பகிர வேண்டாம் என கேட்டுக்  கொள்கிறோம் .
                                             மாதாந்திர பேட்டி 
பல்வேறு  காரணங்களுக்காக டிசம்பர் மாதாந்திர பேட்டி நடைபெறவில்லை .அதற்கான பேட்டி இந்த மாதம் துவக்கத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை .பல்வேறு ஊழியர்நலன் சார்ந்த கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அரைகுறை நிலையில் இருக்கிறது .குறிப்பாக LSG பதவியில் இருந்த காசாளர் பதவிகள் நிலை -புதிய தோழர்களுக்கான நிரந்தர பணி ஆணை வழங்குவதில் தாமதம் -LRPA பட்டியல் போன்ற பொதுவான விஷயங்கள் அப்படியே இருக்கின்றன .கோட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு மாதாந்திர பேட்டியை விரைந்து நடத்த வேண்டுகிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


0 comments:

Post a Comment