...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 2, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  ஊழியர்களுக்கு சாதகமாக பெறப்படும் தீர்ப்புகளை ஏன் உத்தரவாக பெறக்கூடதா ?பெற முடியாதா  ?
          சமீபகாலமாக நமது தோழர்கள் பல வழக்குகளில் தனியாக சென்று வெற்றிபெற்று அதன் பயனை பெற்றுவருகிறார்கள் என்பது சந்தோசம் தான் ..இலாகாவும் அப்படி வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் அதை அமுல்படுத்துகிறது .அதே பாதிப்புள்ள அனைவருக்கும் அதை விரிவு படுத்த மறுக்கிறது .உதாரணமாக 
1.2004 க்கு முந்திய காலியிடத்திற்கு 2004 க்கு பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் பொருத்தும் என்ற உன்னத தீர்ப்பு 
2.GDS  குரூப் D அல்லது தபால்காரராக நியமனம் ஆனபின் அவர்கள் GDS பணிக்காலத்தை 5/8 என கணக்கிட்டு அவர்களுக்கு பழைய பென்ஷன் கொடுக்கலாம் என்ற டெல்லி முதன்மை நீதிமன்ற தீர்ப்பு 
3இலாகா பதவி உயர்வு பெற்று எழுத்தராக வந்திருந்தாலும் அவர்களுக்கு சேவைக்காலத்தின் அடிப்படையில் MACP III வரை (ஒரு கேடருக்கு மூன்று பதவிகள் தான் ஒருவர்க்கு அதிகபட்சம் மூன்று பதவிகள் அல்ல )பதவிஉயர்வு கொடுக்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு 
  இவைகளின் அடிப்படையில் அகிலஇந்திய சங்கங்கள் 
போராடியோ அல்லது நீதிமன்றத்தில் மத்தியசங்கத்தின் சார்பாக ஒரே வழக்காக எடுத்து வாதாடியோ ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய முயற்சியில் இறங்க வேண்டும் -அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பை வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் பொருந்தும் என்ற உத்தரவினை Department JCM கூட்டத்தில் வைத்து பெற்றுத்தரவேண்டும் என எதிர்பார்க்கிறோம் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:

Post a Comment