...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 29, 2018

                                          வருந்துகிறோம் 
நெல்லை AIGDSU சங்கத்தின் கோட்ட செயலர் -
தோழர் S .காலப்பெருமாள் GDSMD விஜயநாராயணம் நாவல்பேஸ் அவர்கள் நேற்றிரவு நாங்குநேரி -திசையன்விளை சாலை ஏமென்குளம் அருகில் சாலைவிபத்தில் சிக்கி அபார மரணமடைந்தார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 29.012018 நண்பகல் நடைபெறும் .
  தோழர் காலப்பெருமாள் அவர்கள் AIGDSU சங்கத்தின் நெல்லை கோட்ட செயலர் -மாநில உதவி செயலர் என்று பல்வேறு பொறுப்புகளில் மிளிர்ந்தவர் -மிடுக்கான மேடைப்பேச்சும் எடுப்பான கோஷமும்அவரை மாநிலம் முழுவதும் விரைவிலே அடையாளம் காட்டியது .அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் உண்மை பற்றாளனாய் திகழ்ந்தவர் .நெல்லை அஞ்சல் மூன்றுசங்கத்திற்கு பேருதவி புரிந்தவர் .அவருடைய மரணச்செய்தியை கேட்டு அதிர்ந்து போனேன் .இரவோடுஇரவாக தோழர்கள் பாட்சா ஜாபர் மற்றும் செல்வம் ஆகியோருடன் நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு சென்று -தோழரின் இறுதிச்சடங்கு தொடர்பாக எடுக்கவேண்டிய உதவிகளை குடும்பத்தாருடன் செய்து வந்தோம் .இறுதிச்சடங்கு அவரது சொந்த கிராமமான விஜயநாராயணத்தில் நடைபெறுகிறது .
தோழரை இழந்துவிடும் அவர்தம் குடும்பத்திற்கு நெல்லை NFPE -ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது 

0 comments:

Post a Comment