...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 31, 2018

இன்று பணி ஓய்வு பெறும் நெல்லை தோழர்களை வாழ்த்துவோம் !
             தோழர் அன்சாரி SBCO திருநெல்வேலி HO 
அன்சாரி என்ற அமைதியே !
அறுபது உனக்கென்று யார் சொன்னார் !
தோற்றத்திலும் தெரியவில்லை 
தொய்வில்லா பணியிலும் தெரியவில்லை 
அன்பு அடக்கம் அமைதி என்ற 
அடையாளங்களின் அணிவகுப்பாய் 
அனைவரின் உள்ளங்களையும் 
அலங்கரித்த அன்சாரி வாழ்க !
விழா -திருநெல்வேலி HO மாலை 5 மணி  
-------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் தர்மர் GDSMD மதவக்குறிச்சி மானுர் பணி ஓய்வு வாழ்த்துக்கள் 
ED சங்கமெனும் அமைப்பு 
அழைப்பு விடும் பொழுதெல்லாம் 
சிங்கமென சிலிர்த்துவரும் தர்மரே !
நீயா -கமிட்டியா -
எது முந்தும் என பார்த்ததில் 
கமிட்டியை முந்தியவனே !
தளரா உறுதி -தயங்கா உள்ளம் 
தடம்மாறா பயணம் -நீடு வாழ 
உன்னை வாழ்த்துகிறேன் 
நிகழ்ச்சி -மானுர் அஞ்சலகம் மாலை 5 மணி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment