தை(ரியம் ) பிறக்கட்டும் !
பொங்கட்டும் --புரட்சி பொங்கட்டும்
தங்கட்டும் இன்பம் இங்கே தங்கட்டும்
மங்கட்டும் கவலை இனி மங்கட்டும்
ஓங்கட்டும் ஒற்றுமை ஒன்றே ஓங்கட்டும்
நூற்பவன் நூலாக்குகிறான்
நெய்பவன் ஆடையாக்குகிறான்
தொழிலாளிக்கு குறைந்த கூலியும்
முதலாளிக்கு நிரம்ப லாபமும் நிரந்தரமாகியது
ஆண்டான் அடிமை இல்லை -
ஆட்சியாளர்கள் உருவில் தொடர்கிறது
கொத்தடிமை பிரபுத்துவம் -புதிய பெயர்களில்
கோலோச்சதான் செய்கிறது
தை பிறந்தால் வழி பிறக்கும்
நம்பிக்கை ஒன்றும் குறையவில்லை
எத்தனை தை-கள் -உழைப்பவனின்
வலிகள் எங்கும் மறையவில்லை
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை போதும் -
உழைப்பு சுரண்டலுக்கு எதிராக
வாதிட வேண்டாமா ?
ஆர்ப்பாட்டம் -போராட்டம்
நடுவர் குழு -பேச்சுவார்த்தை
வாக்குறுதிகளுக்கு குறைவில்லை
மாநிலத்திலும் -மத்தியிலும்
பொதுமக்கள் நலன் கருதி
போராட்டம் தள்ளிவைக்கப்பட்டதாம்
பத்திரிக்கைகள் பீற்றுகின்றன
தொழிலாளியின் முற்றுகையால்
அரசாங்கம் பணிந்ததாக செய்தி வருமா ?
பால் பொங்க வைத்த
நெருப்புகளை அனைத்திவிட்டு
புரட்சிகள் பொங்கும்
கணைகளை எடுத்து வா !
தை பிறந்தால் மட்டுமல்ல
தைரியம் பிறந்தால் தான்
வழி பிறக்கும்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
பொங்கட்டும் --புரட்சி பொங்கட்டும்
தங்கட்டும் இன்பம் இங்கே தங்கட்டும்
மங்கட்டும் கவலை இனி மங்கட்டும்
ஓங்கட்டும் ஒற்றுமை ஒன்றே ஓங்கட்டும்
நூற்பவன் நூலாக்குகிறான்
நெய்பவன் ஆடையாக்குகிறான்
தொழிலாளிக்கு குறைந்த கூலியும்
முதலாளிக்கு நிரம்ப லாபமும் நிரந்தரமாகியது
ஆண்டான் அடிமை இல்லை -
ஆட்சியாளர்கள் உருவில் தொடர்கிறது
கொத்தடிமை பிரபுத்துவம் -புதிய பெயர்களில்
கோலோச்சதான் செய்கிறது
தை பிறந்தால் வழி பிறக்கும்
நம்பிக்கை ஒன்றும் குறையவில்லை
எத்தனை தை-கள் -உழைப்பவனின்
வலிகள் எங்கும் மறையவில்லை
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை போதும் -
உழைப்பு சுரண்டலுக்கு எதிராக
வாதிட வேண்டாமா ?
ஆர்ப்பாட்டம் -போராட்டம்
நடுவர் குழு -பேச்சுவார்த்தை
வாக்குறுதிகளுக்கு குறைவில்லை
மாநிலத்திலும் -மத்தியிலும்
பொதுமக்கள் நலன் கருதி
போராட்டம் தள்ளிவைக்கப்பட்டதாம்
பத்திரிக்கைகள் பீற்றுகின்றன
தொழிலாளியின் முற்றுகையால்
அரசாங்கம் பணிந்ததாக செய்தி வருமா ?
பால் பொங்க வைத்த
நெருப்புகளை அனைத்திவிட்டு
புரட்சிகள் பொங்கும்
கணைகளை எடுத்து வா !
தை பிறந்தால் மட்டுமல்ல
தைரியம் பிறந்தால் தான்
வழி பிறக்கும்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment