...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 24, 2018

                                         நெல்லை கோட்ட செய்திகள் 
ஒரு நீண்ட முயற்சிக்கு பிறகு நமது கோட்டத்தில் BUNCHING OF INCREMENT உத்தரவு தோழர் KS .ஷியாம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .பிப்ரவரி 2017 இல் வைக்கப்பட்ட கோரிக்கை -இடையில் மண்டல நிர்வாகம் நிறுத்திவைத்து மீண்டும் இலாகாவால்  செப்டம்பரில் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல் ஆணை -இதர கோட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இவைகளின் அடிப்படையிலும் கோட்ட சங்கத்தின் அயரா முயற்சியாலும் -பாதிக்கப்பட்ட தோழரின் தளரா உறுதியாலும் --பெறப்பட்ட இந்த உத்தரவிற்கு நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .
                    வேலூர் கோட்டத்தில் CSI அமுலாக்கம் 
மிகுந்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தமிழகத்தில் முதன்முதலாக CSI அமுலாக்கம் 23.01.2018 அன்று வேலூரில் அமுலாகியுள்ளது .சென்னை மண்டல அதிகாரி மரியாதைக்குரிய திரு .ஆனந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .தேர்தல் முடிவுகளை போல் அவ்வப்போது நடந்த நிகழ்வுகளை வேலூர் கோட்ட செயலர் மற்றும் மாநில உதவி செயலர் தோழர் வீரன் அவர்கள் பதிவிட்டுக்கொண்டிருந்தார்கள் .மாநில செயலரும் தன் பங்கிற்கு அவ்வப்போது கள நிலவரங்களை அதிகாரிகளுக்கு தெரிவித்து கொண்டிருந்தார் எத்தனை அலுவலகத்தில் DAILY ACCOUNT  .வந்தது இன்னும் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தமிழகம் முழுவதும் பற்றி கொண்டது CBS அமுலாகும் போது எப்படி அலங்கரிக்கப்பட்ட அலுவலகங்களில் வரவேற்றோமோ அதே போல் வேலூர் அஞ்சலகத்திலும் பார்க்க முடிந்தது .எந்த சவால்களையும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் ஊழியர்களிடமும் எந்த தடைகளையும் தகர்க்க கூடிய ஆற்றல் நம் சங்கத்திற்கு உண்டு என்று தமிழகத்தில் நாம் நிருபித்திருக்கிறோம் .வேலூர் கோட்ட ஊழியர்களுக்கும் மாநில சங்கத்திற்கும்  எங்கள் வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 













0 comments:

Post a Comment