...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 31, 2018

இன்று பணிநிறைவு பெறும் நாகப்பட்டினம் கோட்ட செயலர் தோழர் S .மீனாட்சி சுந்தரம் அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள் 

நாகை தந்திட்ட 
நல்லதொரு தலைவனே !
வாகை சூடி படைநடத்திய 
மற்றுமொரு ராஜ் மோகனே !

நாகை புயல் தாக்கும் பகுதிதான் -உன் 
நாவன்மையால் புயலை தடுத்தாய் 
வாதத்தில்  வல்லமை உனக்குண்டு -
பிடிவாதத்தை ஒருபோதும் பார்த்ததில்லை 

தகவல் அறியும் சட்டத்தை 
சரியாக பயன்படுத்தியவன் நீ 
தவறறியா ஊழியர்களை 
தற்காத்து காத்தவன் நீ 

விரல் நுனியில் சட்டங்கள் 
கர்வங்கள் கொண்டதில்லை 
விடாப்பிடியும் விடாமுயற்சியும் -உன் 
வெற்றிக்கு உதவிய ஆயுதங்கள் 

கோட்ட செயலராய் மட்டுமல்ல 
கோட்ட அலுவலகத்திலும் மிளிர்ந்தவன் 
கொள்கை முரண் ஏதுமின்றி -ஒரு 
கோடுபோட்டு வளர்ந்தவன் 

சமரசம் இல்லா போராளி -அதிகாரியிடம் 
சாமரம் வீசா ராஜாளி 
விருப்பு வெறுப்பு இருந்ததில்லை -பெரிய 
பொறுப்பு தேடியும் அலைந்ததில்லை 

தலைமைக்கு ஏற்ற அத்தனை பண்புகளையும் 
தன்னகத்தே கொண்டிருந்தாலும் 
தன்னடக்கத்தோடு இருந்தாய் 
தன்னை கொடுத்து சங்கம் காத்தாய் !
வாழ்க ! உன் புகழ் ஓங்குக !
                                               வாழ்த்துக்களுடன் 
S.பேராட்சி                                                                               SK .ஜேக்கப் ராஜ் 
தலைவர் PSD நெல்லை                                         கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment